403 பூர்வாசிகள் சோழியர் என்ற வைணவ அந்தண இனத்தார் இங்கு வாழ்கின்றனர். திருக்கோட்டியூர் நம்பி இவ்வினத்தவரே. அரசர்கள் அந்தணர்களுக்கு வழங்கிய பிரமாணப்பட்டி என்ற சிற்றூர் இவ்வூரருகே உள்ளது. நரசிம்ம அவதாரம் உருவானது இத்தலத்தில்தான் என்று கருதப்படுகிறது. பிரம்மனும் சிவனும் விஷ்ணுவும் இங்கே கோஷ்டி யாகக் கூடி இரணியனின் கொடுமைகளை அடக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. வைகுண்ட வாசலாகிய கோவிலின் வடக்குக் கோபுரவாயிலில் இருமருங்கும் இரணியனோடு நரசிம்மமூர்த்தி போர்செய்யும் உருவம் ஒன்றும், இரணியனை மாய்க்கும் வடிவம் ஒன்றும் பெரிய உருவில் அழகாகச் சித்திரிக்கப் பெற்றுள். சமயவரலாற்றில் கோட்டியூர்: இராமாநுஜர் எல்லோரும் புரிந்து அனுபவிக்கக்கூடிய பக்தி மார்க்கத்தைப்போதித் தார். ஆழ்வார்கள் தமிழில் எழுதிய பாடல்களை அவர் வேத மந்திரத்திற்குச் சமமாகப் போற்றினார். இதனால் ஓரளவே கல்வியறிவுள்ள மக்களும் சமயக்கோட் பாடுகளை உணர வழி பிறந்தது. இந்தச் சீரிய கொள்கை யின் அடிப்படையில் இராமாநுஜர் நாராயண மந்திரம் என்னும் வைணவ மந்திரத்தை அனைவர்க்கும் தெரிவித் தார். எனவே வைணவ சமயத்தின் வளர்ச்சியில் திருக்கோட்டியூருக்குப் பெரும் பங்கு உண்டு. வைணவம் வடஇந்தியாவெங்கும் பரவுவதற்கு இராமாநுஜரே காரணமாவார். இவரைப்பின்பற்றி இவருடைய வைணவ சம்பிரதாயத்தையே ராமானந் தர்-கபீர் ஆகியோர் பரப்பினார்கள்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/405
Appearance