உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 புணரி என்று தவறுதலாய் வழங்கப் பெற்றுச் சிங்கமும் நரியும் புணர்ந்ததாகக் கதையும் புனையப்பெற்றது. இவ்வூர்ப்பெயர் - சிங்கம்பிடவூர் என இருத்தல் வேண்டும் என்பது சிலர் கருத்து. சாத்தனார்க்குக் கோயில் அமைத்து வழிபடும் வழக்கம் சிலப்பதிகாரத் தில் காணப்படுகிறது. இத்தகைய கோயில்கள் உள்ள ஊர்களுள் பிடவூர் என்பது ஒன்றாகும். பிடவூரின் மரூஉ பிடாரி. சென்னை - ஆவடியருகே கோயில்பிடாரி என்னும் ஊர் இருக்கிறது. தென் ஆற்காடுமாவட்டத்து வீராணம் ஏரிக்கரையில் புடையூர் என வழங்கும் பிடவூர் உளது. தஞ்சை மாவட்டம் திருக்கடவூர் அருகே ஒரு பிடவூர் இன்றும் இருந்து வருகிறது. இராமநாதபுர மாவட்டத்தில் திருவாடானைக்கு உட்கிடையாக பிடார னேந்தல் உளது. . இவ்வூர் ஐயனார் கோயில் புகழ் பெற்றது. இறைவன் - சேவுகப் பெருமாள், இதனால் இப்பகுதியில் சேவுகன், சேவுகப்பெருமாள். சேவுகமூர்த்தி, சேவுகரத் தினம் என்ற பெயர்கள் இடப்படுகின்றன. இறைவி- பிடாரி. கோயில் சிவகங்கை தேவஸ்தானத்தைச் சேர்ந்தது. வைகாசியில் 10 நாள் திருவிழா நடை பெறுகிறது. இக்கோயிலுக்கு, நேர்த்திக் கடனாக விடப் பட்டுள்ள மாடுகளின் எண்ணிக்கை 500 இருக்கும். வை கோவில் நிலங்களை உழுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. 30 மைல் சுற்று வட்டத்திலுள்ள மக்கள் இக்கோயிலில் பாக்கு வைத்து, கோயில் மாடுகளைத் தம் ஊர் மஞ்சிவிரட்டுக்கு அழைக்கின்றனர். இவ்விழாக் களில் மாடுபிடிப்பவர்கள் இவ்வூர்க் கோயில் மாடுகளைப் பிடிப்பதில்லை. அவற்றின் மீது கச்சையாகக் கட்டப்படும் வேட்டியை அவிழ்ப்பதுமில்லை. கோயில் மாடு இறந் தால் அதை மேள தாளத்துடன் புதைப்பது வழக்கம்.