40% இவ்வூர்க்குரிய சிவன்கோயில் உள்ள இடம் சிவ புரிப்பட்டி. திருப்பத்தூர்ச்சாலையில் சிங்கம்புணரித் தென்னை நாற்றுப் பண்ணைக்கு அருகே மங்கள கணபதி யின் திருவுருவம் சாலை ஓரமாக உளது. ஒரு ஒரு கை பின்னப்பட்டபோதிலும், இவ்விநாயகரின் திருமேனி. பெரிய அளவினதாயும் காண்பாரை ஈர்க்கத் தக்கதா யும் உள்ளது இவ்விடத்தில் ஒரு மண்டபம் இருந்த தற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றன. அதை யடுத்துப் பாலாறும், அவ்வாற்றின் வடகரையில் சிவன் கோயிலும், அதைச் சார்ந்த சிவபுரிப்பட்டியும் அமைந் திருக்கின்றன. இறைவன் - தான் தோன்றி ஈசுவரா. இறைவி - அறம் வளர்த்த நாயகி. சுற்றுமதிலுக்கு வெளியே இறைவிக்குத் தனிக் கோயில் கட்டப் பெற் றிருக்கிறது. இக்கோயில் சிவகங்கை ஜமீனுக்கு உட்பட்டிருந்தது. ஜமீன் ஒழிப்புக்குப்பின் கோயிலின் வருவாய் குறைந்து கந்தர்சஷ்ட்டித் திருவிழா நின்றுவிட்டது. கோயிலுள் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர்க்கு ஓர் உட்கோயில் இருக்கிறது. இதுதவிர தனியே சுப்பிரமணியர் திருவுருவம் மட்டும் உள்ளது. இவ்வுருவம் கலையழகுடன் கூடியது. நந்தியம் பெருமான் உருவம் மிகப் பெரிய அளவினது. சித்திவிநாயகர் ஓர் ஆள் உயரம் அளவினது. பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர், மதுரை முக்குறுணி அரிசி விநாயகர் ஆகியவற்றோடு ஒப்பிடத்தக்கது. தோற்றப் ' பொலிவும் நுண்ணிய வேலைப்பாடுமுள்ள நவக்கிரகங்கள் இக்கோயிலிலுள்ளன. உண்டு. மின்சார விளக்கு நான்கு காலப்பூசை 1966-இல் போடப்பட்டிருக்கிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரிவியூர் நகரத்தாரால் விரி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/409
Appearance