415 யாக உள்ளனர். இரண்டு மைல் தொலைவில் திருச்சி- மதுரை நெடுஞ்சாலை இருக்கிறது. அய்யாபட்டி: எஸ். எஸ். கோட்டைக்கும் முறையூர்க் கும் இடையேயுள்ள சிற்றூர். நெடுங்காலமாக இங்கு கேட்கும் கேள்விகளுக்கு விடைகூறி, நம்பிக்கை உள்ள வர்கள் வருங்காலத்தை அறிய கோடாங்கி அழைக்கும் போது வழிகூறும் பெரியவர் உள்ளார். அய்யாபட்டிச் சாமி என்று அவருக்குப் பெயர். ஐயனார் கோவிலும் முறையூர் தெவராயச் செட்டி யார் அமைத்த ஆசிரமும் உள்ளன. முறையூர்: பாலாற்றின் தென்கரையில் அமைந்த வளமான ஊர். இங்கு நகரத்தார்களும் வேறுபல சாதி யினரும் வாழ்கின்றனர். இவ்வூர் நகரத்தார்கள் திருமணத்தில் ஒற்றைவடம் சங்கிலி அணிவர். இது ஒன்றே இவர்களுக்கும் ஏனைய நாட்டுக் கோட்டை யாருக்கும் உள்ள வேறுபாடு. வழக்குகளைத் தெரிவித்து நீதிதேடி வந்தவர் சுட்கு இவ்வூரார், நியாயம் தவறாது முறையாக (நேர்மையாகப்) பஞ்சாயத்துத் தீர்ப்புச் சொன்னதால் முறையூர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். ஆற்று வளத்தாலும் வற்றாத கிணறுகளிலிருந்து பம்ப் செட்கள் வழியாகவும் இங்கு நெல்லும் கரும்பும் கடலையும் பெரிய அளவில் பயிரிடப்படுகின்றன. ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டிருப்பதால் இவ்வூர்க்குப் போக்குவரத்து எளிதாகும். மேலும், தெக்கூர் பொன்னமராவதி முதலிய ஊர்களிலிருந்து மதுரைக்குச் செல்ல ஒரு குறுக்குச்சாலை ஏற்பட்டிருக்கிறது. முறையூர் ஒருகாலத்தில், போர்வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் புகழ்பெற்றிருந்தது. இவ்வூர்ச் சிவன்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/417
Appearance