உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 கோயில் சுவர்மீது. வீரர்களின் உருவங்கள் பொறித் திருப்பதைக் காணலாம். இந்த மீனாட்சிசுந்தரப் பெருமான்மீது பாடப்பெற்ற பிரபந்தங்களையெல்லாம் திரட்டிக் கொட்டாம்பட்டிக் கருப்பையா பாவலர் இந் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரு வள்ளலாய் விளங்கிப் புலவர்களை ஆதரித்த பழ. சண்முகம் செட்டியார் இவ்வூரினா ஆவார். அவருடைய விரிவான வரலாற்றை இவ்வூரினரும் புகழ் பெற்ற பிரசுரகர்த்தருமான அரு சொ' வெளியிட்டிருக் கிறார். மதுரையில் இரும்பு வணிகத் தொழிலில் புகழ் பெற்ற தெவராயன் செட்டியார் இங்கும் சுற்றளவிலும் பல அறங்களை செய்துள்ளார்கள். பிரான்மலை திருப்பத்தூர் - சிங்கம்பிடாரிச் சாலையிலுள்ள மட்டியூர் (இந்நாளில் சதுர்வேதமங்கலம் எனவழங்கும்) ஊருக்கு வடக்கே 10 கி. மீ. தொலைவில் இந்த மலையும் அடிவாரத்திலுள்ள ஊரும் உள்ளன. திருப்பத்தூரி லிருந்து 20 கி.மீ. தொலைவு. மக்கள் தொகை 2,000. . வரலாற்றுச் சிறப்பு : பெரு வள்ளலாகத் தோன்றி, பேரருளுக்கும் பெருங்கொடைக்கும் புகழ்பெற்று மக்கள் உள்ளங்களில் என்றும் வாழ்பவன் பாரி. பிரான்மலைச் சரிவில் உள்ள அருளகம் என்னுமிடத்திலிருந்து அவன் ஆட்சி செய்ததாகக் கூறுவர். பாரி ஆண்ட நாடு பரம்பு நாடு. பிற்காலத்தில் இது பிரம்பூர்நாடு என மருவி வழங்கிற்று. இன்றும் இப் பகுதியில் எழுதப்பெறும் சில ஆதாரங்களில் 'பிரம்பூர் நாட்டில்......' என்ற வாசகம் பயன்படுத்தப்பெறுகிறது. பரம்புநாடு திருவாதவூர்வரை பரவியிருந்ததாகத் தெரி கிறது.