-417 புலவர்கட்கு இவன் பல ஊர்களை வாரி வழங்கிய தால், முன்னூறு ஊரும் கொடுத்து மூவாப் புகழ்பெற்ற வள்ளல் பாரி என இவன் சிறப்பிக்கப் பெறுகிறான். தலம் : இது கபிலரால் பாடப் பெற்றது. சம்பந் தர் தேவாரமும் பெற்றது. கொடுங்குன்றம் என்பது தேவாரப் பெயர். பிரான்மலையை அடுத்த தனிக்குன்றில் மூன்று நிலைகளில் மூன்று கோயில்கள் உள்ளன. இவற்றுள் முக்கியமானது அடிவாரத்திலுள்ள பெரிய கோயில். இதுவே பாடல்பெற்றது. இங்குள்ள இறைவன் - திருக் கொடுங்குன்றநாதர். W றைவி குயிலமிர்தநாயகி இங்குள்ள சுப்பிரமணியருக்கு அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார். இக்கோயிலில் நடராசர், அறுபத்துமூவர், நவக் கிரகத் திருவுருவங்கள் அமைந்து வழிபடப் பெற்று வருகின்றன. திருமுறைக் கோயிலும் இங்கு உண்டு. வாகன மண்டபத்தில், ஆதீனத் தலைவர்களின் திருவுரு வங்கள் கல்லிற் பொறிக்கப் பெற்றிருக்கின்றன. சங்கிலிகளிலும் தூண்களின் இடையில் துவாரங்களி னூடேயும் சிற்பக் கலையின் சிறப்பை இக்கோயிலிற் காணலாம். குன்றின் நடுப் பகுதியில் வயிரவர் கோயில் அமைந் திருக்கிறது. வேல் வேல் மயில்' என்ற ஓசையுடன் பாதாள நடனம் ஆடும் ஓசை நள்ளிரவுக்குப்பின் இக்கோயிலின் சுற்று மதிலில் நந்தியின் அருகே கேட்பதாகக் கூறுவர். வயிரவர் கோயிலுக்கு 30 அடி மேலே, குன்றின் மிக உயர்ந்த பகுதியில் அம்மையப்பர் வடிவில் மங்கை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/419
Appearance