418 பாகன் கோயில் கொண்டுள்ளார். இத்திருவுருவம் மலையில் குடையப் பெற்றது. இறைவி தேனம்மை இடது பக்கத்திலும், இறைவன் மங்கைபாகன் என்ற மங்கை நாயகன் வலதுபுறத்திலும் காணப்படுகின்றனர் இங்கு தேனும் தினைமாவும் தோசையும் படைக்கப் பெறுகின்றன. தீபாவளி நாளில் மட்டும்தான் அபிஷே கம் செய்யப்படுகிறது. குன்றக்குடியிலுள்ள . இக்கோயில்கள் இப்போது திருவண்ணாமலை ஆதீனத்தின் ஆட்சியில் உள்ளன. பிரான்மலை வகையறா ஐந்து கோவில் தேவஸ்தானம்' என்ற பெயர் நிலவுவதால், இந்த ஆதீனத்தின் தலைமை யிடம் முன்னர் பிரான்மலையில் இருந்திருக்கக்கூடும். ஆதீனத்துக்குப் பெருத்த வருமானம் இம்மலைப் பகுதியிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள சொத்துக்களின் வழியாகவே கிடைக்கிறது. இங்கு ஆதீனத்தார் ஓர் உயர்நிலைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். . கோயில், ஆதீனம், நெடுஞ்சாலையிலிருந்து ஒதுங்கி உள்நாட்டில் இயற்கைச் சூழல் - இவற்றால் இங்கு இசை யும் நடனமும் இன்ன பிற கலைகளும் வளர்ந்து வருகின்றன. அருகேயுள்ள செல்லியம்பட்டி; வார்ப்பட்டி என்பவை இசைக் கருவிகளுக்கு வேண்டும் பொருள்களை வழங்கிய ஊர்களாய் ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கக்கூடும். தல விருட்சம் - உறங்காப்புளி. இரவில்கூட இதன் இலை மூடி இராது. பூப்பது மட்டும் உண்டு. ஆனால், புளியம்பழம் காய்ப்பதில்லை. திருவிழாக்கள்: மலைமீது திருக்கார்த்திகையன்று ஏற்றப்படும் விளக்கு 20 கி.மீ. சுற்றளவுக்குத் தெரி
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/420
Appearance