உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

419 அமாவாசைக்கு கிறது. வருகின்றனர். இங்கு திரளான மக்கள் சித்திரை மாதத்தில் சித்திரைத் திருவிழா நடை பெறுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் இங்கு தேர்த்திருவிழா நிகழ்கிறது. 10 நாட்களில் நடை பெறும் இவ்விழாவை யொட்டி, குன்றக்குடி ஆதீனத் தலைவர் திரும் பெருந்திரு அருணாசல தேசிக சுவாமிகள் அருளாட்சியில் பாரி விழாவும் கொண்டாடப் பெறு கிறது. 1969-இல் இவ்விழாவுக்குத் தமிழ் நாடு அரசின் முதல்வர் கலைஞர் கருணாநிதி வந்திருந்தார். முஸ்லிம்கள் மே மாதத்தில் இங்கு வந்து மலையுச்சி யில் கந்தூரி விழாக் கொண்டாடுகின்றனர். மனிதருக்குள்ள நீதி கன்றுக்கும் உண்டென்று ஒரு சோழன் நீதி வழங்கினான். மரங்களின் பாலும் கருணை காட்டிய பழந்தமிழர் நெறிமுறையை நிலை நிறுத்திய இடம் பிரான்மலை. ஒரு நாள் அந்திமாலையில் தென்றல் நுகரச் சென்றான் பாரி. கொழு கொம்பு இன்றி ஒரு முல்லைக் கொடி துவண்டதைக் கண்டான். அவனுடைய இளகிய நெஞ்சம் துடித்தது. உடனே தன் தேரையே அக்கொடிக்குக் கொழு கொம்பாக நல்கினான். உடுக்கை இழந்தவன் கைபோல அந்த வினாடி யிலேயே வாடிய முல்லைக்கு, துவண்ட அதன் கொடிக்கு, காலம் தாழ்த்தாமல் விரைந்து உதவினான் பாரி மண்ணாண்ட மன்னனாக மட்டுமில்லாமல் அருளாளனா கவும் விளங்கினான். இந்நிகழ்ச்சி நடந்ததாகச் சொல்லப்படும் இடம் ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ளது. அங்கு கல்லாலான நான்கு தேர்க் கால்களும் ஒரு சப்பரமும்