40 ஒரு சிறு படகுவரி விதித்தான் என்பதற்காகத் தன் மருமகனையே கொல்லும்படி இந்தச் சேதுபதி ஆணையிட் டானாம் இந்தச் சேதுபதி உண்டாக்கிய ரகுநாத சமுத்திரம் என்னும் ஏரியும் ஊரும் தஞ்சை மாவட்டத்து எல்லை யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள் சேதுபதி ராக்கத்தேவர். இவர் ஓராண்டுக் காலந்தான் ஆட்சி புரிந்தார். இவருடைய சேனைத்தலைவரின் பெயர் தளவாய் வெள் ளையன் சேர்வை. இவர் சிறந்த போர்வீரர். இவர் காலத் தில் தஞ்சாவூர் மன்னர் இராமநாதபுரத்தின்மீது படை யெடுத்தார். தளவாய் வெள்ளையன் சேர்வை தஞ்சாவூர் மன்னரின் சேனையை முறியடித்தார். இன்னும் மதுரை மன்னரின் உதவிக்காகத் திருநெல் வேலிக்குச் சென்று, அங்கு கிளர்ச்சி செய்த பாளையக் காரர்களை அடக்கினார். செல்லமுத்து விசய ரகுநாத சேதுபதி 1754இல் டச்சுக்காரர்கள் கீழக்கரையில் ஒரு பண்டக சாலையைக் கட்ட அனுமதி வேண்டினர். சேதுபதி மன்னர் இவ்வனுமதியளித்தார், ஆனால் இப்பண்டக சாலையை ஒரு படைத்தளமாகச் செய்ய சேதுபதி மன்ன ருக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்தனர். சேதுபதி மன்னர் தம் படையை அனுப்பி டச்சுக்காரர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கைதிகளாக்கினார். டச்சுக் காரர்கள் மன்னிப்பு வேண்டவே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவருக்குப் பிறகு முத்துராமலிங்கச் சேதுபதி என்பவர் பட்டத்திற்கு வந்தார்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/42
Appearance