உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 முஸ்லீம் ஆட்சி கர்நாடக நவாப்பாக இருந்த முகமது அலி கிழக்கு இந்தியக் கம்பெனி தனக்கு இருந்த செல்வாக்கால் இராமநாதபுரம், சிவகங்கைச் சீமைக்காக வலிய தஞ்சை அரசர்களுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றான். அதன் பயனாய் 1772 முதல் 1780 வரை 8 ஆண்டுக் காலம் இராமநாதபுரம் முஸ்லீம் ஆட்சிக்குட்பட்டது. மக்கள் கொதிப்படைந்தனர். இந்த நிலையில் இராமநாதபுரம் சீமை நவாப்புகளுக்குக் கப்பம் கட்டி அடிமை நாடா யிற்று. திரும்பி ஆங்கிலேயர் இதை ஒரு ஜமீனாக்கி ஓர் ஆண்டுக்கு இராமநாதபுரம் ஜமீன்தார் 2,20,000 ரூபாய் கப்பம் கட்டவேண்டும் என்று முடிவு செய்தனர். கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஓர் உயர் அலுவவரை இங்கு அனுப்பி வைத்தனர். அவருடைய சூழ்ச்சியாலும் திறமையாலும், இராமநாதபுரம் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சிக்கு மாறியது. மதுரை மாவட்டம் ஏற்படும் முன்பே இராமநாதபுரத்தில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற் பட்டது. ஆனால் அது கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சியில் இருந்தது. திருநெல்வேலியிலுள்ள பாளையப் பட்டுகளை இராமநாதபுரம் கலெக்டரின் அதிகாரத்திற் குச் சேர்த்தனர். இது ராமநாதபுரத்திற்கு ஒரு கெளரவம் என்று பிஷப் கால்டுவெல் குறிப்பிட்டுள் ளார். இதற்குப் பின்னரே மதுரை ஜில்லா என்று தனி ஜில்லா ஏற்படுத்தப்பட்டது. 1797-ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் பெரிய கலகம் ஏற்பட்டது. அவ்வாண்டில் ஜாக்சன் என்ற வெள்ளைக்காரரை கலெக்டராக கிழக்கிந்தியக் கம்பெனி யார் நியமித்தனர். அப்போழுது பாளையக்காரர்களி லேயே மிகவும் பலம் வாய்ந்தவர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கர் ஆவார். இவர் -3 .