உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 429 கொங்கண மகரிஷி இங்கு தவமிருந்து தங்கத்துக்கு மாற்றுக் கண்டறிந்தார் என்பர். இறைவன் அதனாலேயே ஐந்நூற்றீசர் எனப்பெயர் பெற்றார் என்று காரணம் கூறப்பெறுகிறது. சேலம் மாவட்டத்து ஏழுமாற்றூர் என்னும் ஊர்ப்பெயருக்கும் இவ்வாறே காரணம் கூறப்பெறுவது ஒப்புநோக்கத்தக்கது. புதுவயல்: பேரூராட்சியும் ஊர் எல்லையில் இரயில் நிலையமும் உடைய ஊர், வாணிபத்தில் சிறந்த முஸ்லிம்களும் நகரத்தார்களும் வாழ்கின்றனர். சில சிறு தொழில்கள் இங்கு இயங்குகின்றன. கண்டனூர்: கண்டனூர்- புதுவயல் இரயில் நிலையத் தை அடுத்த சிறு நகரம். கல்வித்துறையில் மிகவும் முன்னேற்றமடைந்திருக்கிறது. சிவன்கோவில் சிற்பச் சிறப்புடையது. ம.தொ.6,000. . இலுப்பைக்குடி: காரைக்குடி இரயில் நிலையத்தி லிருந்து 3 கி.மீ. தொலைவு. நகரக்கோவில் உடையது. அரியக்குடி: காரைக்குடியின் எல்லையிலுள்ளது. ம.தொ.20:4. புகழ்பெற்ற வைணவத் திருப்பதி, வெள்ளித் தேரும் கருட வாகனமும் வயிரமுடியும் உடைய கோயில் இது. வைகாசியில் பிரமோற்சவம் நிகழ்கிறது. இசைமேதை இராமாநுச ஐயங்கார் தோன்றிய ஊர் இதுவே. அமராவதிபுதூர்; (2,351) 19-ஆம்நூ -இல் தெய்வீகக் கோட்டையாகவும் 20-ஆம் நூ.-இன் முற்பகுதியில் ம் தேசியக் கோட்டையாகவும் விளங்கிய இவ்வூர் தேவ கோட்டை ரோடு என்னும் இரயில் நிலையத்தருகே அமைந்துள்ள தொழிற்பேட்டையை அடுத்தமைந்தது. ஓட்டுத்தொழிற்சாலைகள், நுரையீரல் மருத்துவமனை (T. B. Sanatorium) கோழிப்பண்ணை, குமரன்