430 சொ. முருகப்பா - மரகதவல்லி தம்பதிகள் தொடங்கிய மகளிர் இல்லம் குருகுலம் ஆகியவை இங்கு உள்ளன. தேவகோட்டைக்கும் காரைக்குடிக்கும் இடையே இருப் பதால் இவ்வூர் வளர்ச்சியடைந்து வருகிறது. வழி இங்கிருந்து தெற்கே ஆறாவயல், சண்முகநாதபுரம் கண்டதேவிக்கும் வடக்கே கல்லுப்பட்டிக்கும் சாலைகள் செல்லுகின்றன. கைகாட்டி என்னும் இவ் விடத்திலிருந்து காரைக்குடியும் தேவகோட்டையும் ஒரே தொலைவு (8.கி.மீ.). செங்காத்தான் குடி: ஒன்றியத்தின் பிற்பட்ட பகுதி. செம்பளாவயல், காரக்கொண்டான், பாணன்வயல், திருப்பணியேந்தல், நாதன்வயல், வெட்டிவயல், ஈஞ்ச வயல், கொம்புக்காரனேந்தல் முதலிய சிற்றூர்களைக் கொண்டது. சாக்கவயல்: இதுவும் மித்திராவயல், சிறுகபட்டிப் பகுதிகளைப்போல அறந்தாங்கி எல்லையில் அமைந்து பிற்பட்ட நிலையிலுளது. சிறுகப்பட்டி: நாட்டுவளம் குறைந்தும் காட்டுவளம் மிகுந்தும் இருப்பதைப் பீர்க்கலைக்காடு, சபாத்தியாங் காடு, முள்ளங்காடு, தாமரைச் செல்லங்காடு, கைத் திருப்பங்காடு, விளரிக்காடு என்னும் பெயர்களால் அறியலாம். சாலையி நேமம்: கீழச்சிவற்பட்டி- பலவான்குடிச் லுள்ள சிற்றூர். தொன்மைப்புகழுடையது. நகரக் கோவில் ஒன்பதில் ஒன்றான நேமம் கோவில் இங்கு இருக்கிறது; சிற்பச் சிறப்பு உடையது. காட்டு ஆத்தங் குடிக்கும் நேமத்துக்கும் நடுவேயுள்ள நாகப் பரப் பாமலை என்ற மண்மேட்டுக்குள், நேமங்கோயில் விக்கிர
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/432
Appearance