உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

435 இவ்வூரின் ஒரு பகுதியான மாநகரி, மானகிரி என மருவி வழங்குகிறது. மாநகரியிலிருந்து திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, கல்லல் பகுதிகட்குச் சாலைகள் பிரிகின்றன. தேவகோட்டை ரஸ்தா இரயில் நிலையம் இங்கிருந்து 5 5கி.மீ. தொலைவு. இங்கு ஓராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில் இருப்பது அதன் கல்லின் அமைப்பிலிருந்து உறுதிப்படுகிறது. கூத்தளூர்: காரைக்குடி-கல்லல் சாலையிலுள்ள ஊர் நகரத்தார் 96 ஊர்களில் ஒன்று. காரைக்குடிக்கு டவுன் பஸ் செல்லுகிறது. இவ்வூர்க் கத்தோலிக்கத் தேவாலயம் பழமையானது. சுற்றளவுக்கு, இங்கிருந்து கத்தோலிக்கம் பரவியிருக்கிறது. 30 கி.மீ. பிளார்: இப்பகுதி கிறித்தவ மான ஊர். பொய்யலூர்: அழகான மதத்திற்கு மைய பொய்கையுடைய பொய்கையூர் பொய்யலூர் ஆயிற்று. ஊர். மாலைகண்டான்: மாளக்கண்டான் என்பதன் மரூஉ என்பர். சண்டாசுரன் என்ற ஓர் அசுரன் மாண்டு மடிந்த இடம் இது என்பது காளையார் கோவில் தலபுராணத் திலிருந்து அறியப்படுகிறது. வெற்றியூர்: ஊர்ப் பெயருக்கு ஒரு புராண வரலாறு கூறப்படுகிறது. அம்மை சண்டாசுரனை வெற்றி கண்ட இடம் வெற்றியூர் என்பர். பூங்குடி: (கீழப்பூங்குடி) சண்டாசுரனோடு போரிட்டு வெற்றிபெற்ற தேவியைப் பூமாரி பெய்து தேவர்கள் வாழ்த்திய இடம் பூங்குடி என்பர். இளங்குடி: இடையேயுள்ள நாச்சியாபுரத்துக்கும் தளக்காவூர்க்கும் சிற்றூர். நந்தியின் வாயிலிருந்து