436 இரத்தம் கசிவது இவ்வூர்ச் சிவன் கோவிலின் சிறப்பு. வட ஆர்க்காடு மாவட்டம் திருவூறல் (தக்கோலம்) என்ற தலத்தில் நந்தியின் வாயிலிருந்து நீர் ஊற்றிய வண்ணமாகவே இருப்பது இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கோவிலூர்: காரைக்குடியின் மேற்கு எல்லையிலுள்ள சிற்றூர். பழைய பெயர் கழனி நகர் கழனிநகர் கழனி-வயல் இன்றும் இவ்வூர் வயல்கள் சூழவே காணப்படுகிறது. 18-ஆம் நூற்றாண்டில் ஆண்டவர் முத்துராமலிங்க சுவாமிகள் இங்கு ஒரு வேதாந்த மடம் நிறுவினார். அவரும் அவருக்குப்பின் பட்டத்திற்கு வந்தவர்களும் இங்கு செய்த திருப்பணிகளால் இவ்வூர் புகழப்படுகிறது. கோவிலூர் மடத்தின் கிளைமடங்களாவன (1) சிதம்பரம் பொன்னம்பல சுவாமிகள் மடம் (2) பொருள் வைத்த சேரி மடம்,சிக்கல், தஞ்சை மாவட்டம் (3) திருக்களர் மடம், திருக்களர், தஞ்சை மாவட்டம் (4) ஈசானிய மடம், திருவண்ணாமலை.விவரம், நெற்குப்பை வைகாசி விசாகப் பொன்விழா மலரில் காண்க. . கோவிலூரில் சிவலிங்கம் சுயம்பு. இதன் வாயி லாய் வீரசேகர பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கொற்றவாள் (ராஜ கடகம்) என்ற அதிசய வாளைப் பெற்றதாகக் கூறுவர். கொற்றவனுக்கு வாள் வழங்கிய தால் இங்குள்ள சிவபெருமானுக்குக் கொற்றவாளீசர் என்ற பெயர் நிலவிவருகிறது. 12-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. கீழ்த்திசையில் மூன்று கோபுரங்களும் தெற்கே ஒரு கோபுரமும் இருப்பது இக்கோவிலின் சிறப்பு. நடராச மண்டபமும் கம்பத்தாடி மண்டபமும் அவற்றின் தூண் களில் அழகிய வேலைப்பாடுடன் காணப்படும் சிற்பங்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/438
Appearance