437 களும் கோவிலூர்க்குப் பெருமை தருகின்றன. இக் கோவில் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்தது. நகரத்தாரின் 96 ஊர்க்கூட்டங்கள் கோவிலூரில் கூடுவதே மரபு. குன்றக்குடி: செட்டி நாட்டின் பகுதிகளுக்கு எல்லை யாக அமைந்த மலையும், அதன்மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பெற்ற முருகன் கோவிலும், தமிழகமெங்கும் புகழடைந்துள்ள ஆதீனமும் உடையது குன்றக்குடி: காரைக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவு. மலையின் அமைப்பு மயில் போன்றது. மலைமீது முருகன் கோவிலும், மலையின்கீழ் சிவன் கோவிலும் இருக்கின்றன. மயிலின் வடிவத்தில் தோகை இருக்கும் இடத்தில் ஒரு விநாயகர் கோவில் இருக்கிறது. இதன் பெயர் "தோகையடி விநாயகர்". மலைமீது கோபுரமும் மண்டபமும் கட்டியவர் பெரிய மருது பாண்டியர். திருவிழாக்களில் முருகனுக்கு அணிவிக்கப்படும் பொற் கவசம் 'சின்ன மருது உபயம்'. மலையைச் சுற்றிப் பல சத்திரங்கள் உள்ளன. அடிவாரத்தில் மூன்று குடை வரைக் கோயில்களும் மலையிலேயே அமைக்கப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் குடைவரைச் சுவர்களில் செதுக்கப் பட்ட இறையுருவங்களும் உள்ளன. பெரிய வைகாசி விசாகமும் பங்குனி உத்தரமும் இங்கு திருவிழாக்களாக நடைபெறுகின்றன. கார்த்திகை தோறும் திரளான மக்கள் வருகின்றனர். ஆதீனத்தின் தலைமை மடம் இங்குதான் இருக்கிறது. குன்றக்குடி முருகன் கோவிலும் திருப்பத்தூர், திருக்கொடுங்குன்றம் என்ற தேவாரம் பெற்ற தலங்களும் திருக்கோளக்குடி, தேனாச்சியம்மன் திருவண்ணாமலை
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/439
Appearance