. 439 கள், அரசியல் ஆகியோர் குறிப்பிடத்தக்க இனத்தார் ஆவர். சலுகை பெற்றுள்ள ஹரிஜனங்கள் மிகக் பல சாதிகள் சேர்ந்து வாழும் ஊர்கள் குறைவு. நாடார்கள் தங்களுக்குள் மகமை வசூலித்துத் தங்கள் இனத்தவர் நலங்கருதி நெடுங்காலமாகப் பல பொதுச் செயல்களுக்குப் பணம் திரட்டுகிறார்கள். பிறரும் இந்த முறையைக் கையாண்டு வருகின்றனர். சிற்றூரிலுள்ள நாடார்களும் தங்கள் ஊர்ப்பெயரால் சென்னை நகரில் முக்கியமான பகுதிகளில் இடம்வாங்கி, தங்கும் விடுதிகள் கட்டியிருக்கிறார்கள். இவற்றை வணிக அடிப்படையில் நடத்திவருகிறார்கள். அந்தந்த ஊர்க்காரர்களுக்கு அவ்விடுதிகளில் முன்சலுகை உண்டு. நெல்லை உறவு: 1910க்குமுன் இவ்வட்டம் திருநெல் வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. எனவே இங்கு அம்மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கும் பிற பழக்கங்களும் காணப்படுகின்றன. தூத்துக்குடியுடன் இப்பகுதிக்கு வணிகத் தொடர்பு மிகுதி. ஆறுகள். அர்ச்சுனை ஆறு, வைப்பாறு என்ற இரு ஆறுகள் இவ்வட்டத்தின் வழியாகச் செல்லுகின்றன. அர்ச்சனை ஆறு, வற்றாயிருப்புப் பகுதியில் மலையடிவாரத் தில் தோன்றி, வட மலைக் குறிச்சி - கன்னிசேரி வழியாகச் செல்லுகிறது. திருநெல்வேலி மாவட்டத்துச் சங்கரன் கோவில் வட்டத்தில் மேற்குத் தொடர்ச்சிமலையில் வாசுதேவ நல்லூர் அருகே நிட்சேப நதி என்ற பெயருடன் ஓர் ஆறு தோன்றுகிறது. கரிவலம்வந்தநல்லூருக்குக் கிழக்கே இந்த ஆறு வைப்பாறு என்று பெயர் பெற்று வேம்பக் கோட்டை, சாத்தூர், நென்மேனி, முத்தலாபுரம், .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/441
Appearance