உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 விளாத்தி குளம் வழியாக வைப்பாறு என்ற ஊரருகே கடலில் கலக்கிறது. இவ்வாற்றின்மீது கொல்லப்பட்டி அருகே சிறு அணை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாற்றில் ஓராண்டில் ஐந்து மாதங்கள் தண்ணீர் இருக்கும். பருத்தி. பருத்தி: இவ்வட்டத்தின் முக்கிய விளைபொருள் நெடுங்காலமாக இங்கு பயிரிடப்பட்டு வருகிறது. கொட்டையை எடுக்க ராட்டினம் போன்ற ஒரு மரச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 19-ஆம் நூற்றாண்டால் தூத்துக்குடித் துறைமுகத்தி லிருந்து இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்கும் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதற்காக அந்நாட்டு ஆலைகள் பருத்திக் கொட்டையை எடுக்க இயந்திரங்களை ஏற்படுத்தின. ஆங்கிலத்தில் ஜின்னிங்பாக்டரி தைச் சாதாரணமக்கள் 'பஞ்சு ஆபீஸ்' என்பர். வை பருத்தி பயிரிடுபவர்களை ஊக்குவித்தன. என்ப k6, கருங்கண்ணி என்ற பருத்தி வகைகள் பயிரிடப் படுகின்றன. 1961 முதல் லெட்சுமி என்ற ஹூப்ளி (மைசூர்) பருத்தி போட்டுப்பார்த்து இவ்வட்டத்தில் பலர் கூடுதலாக விளைவித்துள்ளனர். மழை, காலம் தவறிப் பெய்தால் k6 ராசி குறைந்து விடுகிறது. அதனால், அதைப்பரப்ப, வேளாண்மைத்துறையினர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பலன் தரவில்லை. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பருத்தி விற்பனை நிலையம், விருதுநகரில் இயங்குகிறது. அது பம்பாயிலுள்ள கிழக் கிந்தியப் பஞ்சு சங்கத்தின் பிராந்திய நிறுவனம். பஞ்சின் தன்மையை ஆராய்ந்து தரம் பிரிக்கும் உரிமை இந்த நிலையத்துக்கு உண்டு. இந்த நிலையம் இந்திய .