அரசின் ஜவுளி 441 ஆணையரால் ஏற்கப்பட்டது. இந்த நிலையத்தின் உறுப்பினர்கள் அடிக்கடி கூடி, பலவகைப் பஞ்சுகளின் ஆகக் கூடுதலான விலைகளை வரையறுக் கிறார்கள். தொழில்கள்: இவ்வட்டத்தில் நூல் ஆலைத்தொழில் அவவளவாகப் பரவவில்லை. விருதுநகரில் ஒரு நெசவாலை உள்ளது. 1920 அளவில் பருப்பு உடைக்கும் தொழிற்சாலை களும், எண்ணெய் ஆட்டும் இயந்திரங்களுக்கான தொழிற்சாலைகளும் மட்டுமே இவ்வட்டத்தில் இருந்த தொழிற்சாலைகள் எனவாம். 1930- இல் இங்கு தீப்பெட்டித் தொழில் ஏற்பட்டது. இப்போது 80 தீப்பெட்டித் தொழிற்சாலைகள் உள்ளன. 1947க்குப் பின் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்பட லாயின. தீப்பெட்டி, பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு வேண்டும் இரசாயனப் பொருள்கள் செய்யும் தொழிற் சாலைகள்,கவின்கலை (லித்தோ அச்சகங்கள், சிமிண்டு ஆலை, எஃகு உருக்கு ஆலை முதலியன ஏற்பட்டுள்ளன. தொழிற்பேட்டைகளில் சிறுபொறியியல் தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வேளாண்மை: சாத்தூர் வட்டம் முழுவதும் சம்பா மிளகாய் புன்செய்யில் 12 மாதமும் பயிரிடப்படுகிறது. காற்று அடித்து மிளகாய்க்குச் சேதம் வருவதைத் தடுக்க, வயலைச் சுற்றிலும் ஆமணக்குப் பயிரிடுகின்றனர். ஏர் உழுவது நீங்கலாக வேளாண்மையின் பிறவேலைகள் அனைத்தையும் பெண்களே செய்கின்றனர். எல்லா ஊர்களிலும் மின்சாரவசதி இருப்பதால், ஓராயிரத் துக்கு மேற்பட்ட கிணறுகள் பயன்பட்டு வேளாண் மைக்கு உதவுகின்றன. கண்மாய்ப் பாசனமும் மிகுதி இ.--28 1
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/443
Appearance