உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 பள்ளிக்கூடங்களுக்கு ஒவ்வொருநாளும் வரும் மாணவர் எண்ணிக்கை இவ்வட்டத்தில் குறைவு. தீப்பெட்டித் தொழிலால், சட்டத்தையும் அமைதியையும் நிலை நாட்டும் வேலை போலீசாரின் முக்கிய அலுவலாக இருப்பதாகவும் தெரிகிறது. சாத்தூர் ஒன்றியத்தில் 300 தொழிற்சாலைகளும், சிவகாசி ஒன்றியத்தில் 100ம் ஏழாயிரம் பண்ணையிலும் அதன் சுற்றுப்புறத்தில் 200ம், விருதுநகரிலும் மன்னார் கோட்டையிலுமாக 100 தாழிற்சாலைகளும் உள்ளன. தொழிலாளருக்குப் பஸ் வசதி செய்து, வீட்டிலிருந்து தொழிற்சாலைகளுக்கும் கூட்டி போய் மீண்டும் கொண்டுவந்து விடுகின்றன. தீக்குச்சி அடுக்கி வருவாய் பெறுவதால், ஆடவரை எதிர்பாராமல் பெண்கள் தாங்களே பணம் சம்பாதித்து திருமணம் செய்து கொள்கின்றனர். கடற்கரையிலிருந்து நெடுந் தொலைவிலிருப்பதும் மழையின்மையும் ஈரமில்லாக் காற்றும் தீக்குச்சித் தொழில் பெருகுவதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. பவுண்டன்பேனா நிப்புகள் செய்வதில் இந்தியாவி லேயே சாத்தூர் நகரம் சிறந்து விளங்குகிறது. பைலட் பேனா கம்பெனியார்கூட இங்கு நிப்புகள் வாங்கு கின்றனர். கல்வி: கல்வித்துறையில் இவ்வட்டம் முன்னேறி யுள்ளது. அரசினர் உயர்நிலைப்பள்ளிகள் இவ்வட்டத்திற் போல், அதிகமாக இம்மாவட்டத்தில் வேறு எங்கும் காண இயலாது. பள்ளிகளுக்குள் போட்டியிருப்பதால், தரமான கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பெரும்பாலும் உள்ளூர் அல்லது சுற்று வட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். இப்பகுதியில் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்.