நூலக 444 இயக்கம் பரவியிருக்கிறது. ஊர்தோறும் ஓர் நூலகத்தைக் காணலாம். ஆட்சி முறை: இவ்வட்டத்திற்குத் தமிழ்நாடு சட்டப் சட்டப் பேரவையில் மூன்று இடங்கள் இருப்பது குறிப் பிடத்தக்கது. மாவட்ட அதிகாரி அந்தஸ்து உள்ள பல அலுவவர்களின் அலுவலகங்கள் விருதுநகரில் இயங்கி வருகின்றன. விருதுநகரில் ஒரு துணைத் தாசில்தார் அலுவலகமும், சிவகாசியில் கோட்ட ஆட்சி அலுவலகமும் உள்ளன. இவ்வட்டத்தில் விருதுநகர்,சிவகாசி, சாத்தூர் என்ற நகராண்மைக் கழகங்களும், விருதுநகர்,சிவகாசி, சாத்தூர், வெம்பக் கோட்டை என்ற நான்கு ஒன்றியங் களும் உள்ளன. விருது நகர் நகரம்: ஊர்ப்பெயர்: ஒவ்வோர் ஊரின் பெயரையும் சுருக்க மாகக் குறிக்க இரயில் நிர்வாகத்தார் ஒரு (code) வைத் திருக்கின்றனர். விருதுநகருக்கு இரயில் டிக்கட்டில் "விபிடி" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். விருதுநகர் முன்பு விருதுபட்டி' என வழங்கி வந்தது. விருதுபட்டி விருதுநகரானது ஒரு கதை. இந்த நகர், நாடார் சமூகத்தினரின் கோட்டை. இலவசமாகக் கல்வி புகட்டிய உயர்நிலைப்பள்ளி ஒன்றை முதலில் ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டில் விருதுநகர் நாடார் சமூகத்தினருக்கே உரியது. அதன் பயனாகக் கல்வி பரவி இளைஞர்களிடையே புத்துணர்ச்சி ஏற்பட்டது. "நம் ஊர் ஒரு நகராகிவிட வேண்டும், பட்டியாக இருக்கக்கூடாது" என்ற ஆசை அவர்களுக்கு ஏற்பட்டது. இவ்வூரின் சிற்பியாகிய செந்திக்குமார் .
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/446
Appearance