உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 கும்பிடுவார்கள். இங்குள்ளவர்களும் இங்கு வாழ்ந்து வீட்டு வெளியூர் சென்று பிழைக்கப்போனவர்களும் தங்கள் தங்கள் குலதெய்வத்தைப் பூஜிப்பதற்காக ஜே ஜே என்று அந்த மாதம் கூடுவர். அப்போது ஒவ்வொரு தெருவிலும் கோலாகலமான விழா நடப்பது எந்த ஊரிலும் காணமுடியாத காட்சி சிவகாசியிலுள்ள விசுவநாதர் கோவிலுக்கு மானிய மாக அரசர்கள் அளித்த ஊர்கள் விசுவநத்தம், விசுவ நாதபுரம் என்ற பெயருடன் சிவகாசி அருகே உள்ளன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மறவர்களுக்கும் நாடார்களுக்கும் இப்பகுதியில் பெரியதொரு கலகம் ஏற்பட்டது. அதுமுதல் ஆங்கில அரசு இந்நகரில் கவனம் செலுத்தியது. மலபார் ஸ்பெசல் போலீசு என்னும் ஆயுதம் தாங்கிய படை சிவகாசியில் நிலையாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். இப்படை யினரின் குடியிருப்பை இன்றும் காணலாம். சாத்தூரிலிருந்து உதவி கலெக்டர் அலுவலகம் 1914-இல் இங்குமாற்றப்பட்டது.சிவகாசி கோட்டாட்சித் தலைவராய் அனுபவம் நிறைந்த ஐ. சி. எஸ். காரர் களையே நியமிக்கும் வழக்கத்தை ஆங்கிலேயர் கைக் கொண்டிருந்தனர். இதைப்பற்றி The Steel Frame and I' என்ற நூலில் எஸ். கே. செட்டூர் எழுதியுள்ளார். . 1930 வரை சிவகாசியும் அதன் சுற்றுப்புறமும் பொருளாதாரத் துறையில் சீர்கெட்ட நிலையில் இருந் தன. வேறு சில வட்டங்களைப்போல இங்குள்ளவர்கள் கடல்கடந்து செல்லவில்லை. இங்கேயே வேளாண்மை செய்வதற்கும் வாய்ப்பில்லை. காரணம் மழை மிகவும் குறைவு. ஒரு சதுரமைலுக்கு, பத்து லட்சம் கன அடி