461 (சாத்தன்) கோவிலைச் சுற்றி உண்டானதால் சாத்தூர் ஆயிற்று என்றும் கூறுவர். வைப்பாற்றின் வைப்பாற்றின் வடகரை யில் (நகரின் கிழக்கெல்லையில்) இருக்கும் சாத்தூரப்பன் கோவிலே, இக்கோவில் என்பர். கோவில்கள்: சிறப்புடன் நடைபெற்றுவரும் சிவகாம சுந்தரி - சிதம்பரேசுவரர் கோவிலும் வைப்பாற்றின் கரையில் நாயக்க மன்னர் காலத்தில் ஏற்பட்ட வேங்கடாசலபதிப் பெருமாள் கோவிலும் பொலிவுடன் விளங்குகின்றன. வரலாறு: சாத்தூர் வரலாற்றுப் புகழ் பெற்றது. வைப்பாற்றுக்குத் தெற்கே இரயில் பாதையை அடுத்து நல்லம நாயக்கன் கோட்டைப் பகுதியில் ஒருநகரம் புதைந்து கிடப்பதாகப் புதை பொருள் அறிஞர் கருதுவர். புத்தரின் கல் உருவமும் நாணயங்களும் இங்கு எடுக்கப் பெற்றுள்ளன. வடக்கே ஏழு மைலில் சிமிண்ட் ஆலை ஏற்பட்டிருக்கும் பகுதி துலுக்கபட்டி எனப்படும். மேற்கே 16 மைலில் துலுக்கக்குறிச்சி என்னும் சிற்றூர் இருக்கிறது. இவை இவ்வட்டாரத் தில் இசுலாம் பரவியதற்குச் சான்று. மொகலாயப் பேரரசனான ஷாஜஹான் கட்டிய மசூதி மேல்கருப்பர் சாமி கோவில் அருகே காணப்படுகிறது. அவன் கட்டிய சத்திரமும் சாத்தூரில் உண்டு, சத்திரத்துக்கு முற்றூட்டாக அம்மன்னன் வழங்கியதே அருகேயுள்ள சத்திரப்பட்டி. ஷா ஜஹானின் படைகள் தங்கிய இடம் செவ்வாய்மடம். அவன் 300 முசுலிம் குடும்பங்களைக் குடி வைத்தான். மதுரையை ஆண்ட மங்கம்மாள் வைப்பாற்றின் மீது முதல் தடவையாக ஒரு பாலம் கட்டினாள். அதுவே சாத்தூரின் தென் எல்லையில் இருக்கும் பாலம். இதன்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/463
Appearance