462 . பிறகு, திருநெல்வேலிச் சீமைக்கு ஒரு வாயிலாக. சாத்தூர் இருந்து வந்தது. மங்கம்மாள் இங்கு ஒரு பெரிய சத்திரத்தையும் விநாயகர் கோவிலையும் கட்டி னாள். பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களுக்கு இந்தச் சத்திரமும் கோவிலும் பெரிதும் உதவின. போர் முடிந்ததும் ஆங்கிலேயர், இந்தச் சத்திரத்தில் தாலூகா கச்சேரியையும் விநாயகர் கோவில் இருந்த இடத்தில் திறைசேரி (Treasury)யும் ஏற்படுத்தினர். திருநெல்வேலி மாவட்டத்துக்குச் சாத்தூரில் ஒரு General Deputy Collector அலுவலகமும் உண்டாக்கினார்கள். இது 1914-இல் "சப்கலெக்டர் ஆபீஸ்" எனப் பெயர் மாறி, சிவகாசிக்கு மாற்றப் பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் சாத்தூரில் கிறித்தவ சமயம் பரவியது. தரங்கம்பாடி அருளப்பர், நாடார் குலத்தினரின் குறைகளை நீக்கி அவர்களைத் தம் மதத்தில் ஈர்த்தார். பிராடஸ்டண்டு. கத்தோலிக்க தேவாலயங் கள் கட்டப்பெற்றன. கன்னிமார் மடம், போதனா முறைப் பள்ளி ஆகியவை கிறித்தவர்களால் ஏற்பட்டன. . களவுப் பயம் நீங்கிற்று. பருத்தி, மிளகாய் வற்றல் வியாபாரங்களில் மக்கள் ஈடுபடலாயினர். வில்வண்டி கள் வாயிலாகச் சங்கரன் கோவில், சிவகாசி, ஸ்ரீவில்லி புத்தூர்ப் பகுதிகளுடன் வியாபாரம் பெருகிற்று. 1886-இல் ஊராட்சி மன்றம் ஏற்பட்டது. தூத்துக் குடிக்கு இரயில் பாதை ஏற்பட்டு; சாத்தூர் முன் னேற்றப் பாதையில் விரைவாக அடியெடுத்து வைத்தது. சாத்தூரை ஓர் இரயில் சந்திப்பாக ஆக்கி, இந்நகரி லிருந்து திருவனந்த புரத்துக்கு இரயில் பாதை போட ஆங்கிலேயர் திட்டமிட்டு ஏற்பாடனைத்தும் செய்து
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/464
Appearance