உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 1967 முதல் சேதுபதியாக இருந்து வரும் இராமநாத சேதுபதி இராமேசுவரம் கோவில் திருப்பணியிலும் சமூக நலச் செயல்களிலும் ஈடுபட்டு மக்களின் நன் மதிப்பைப் பெற்று வருகிறார். சிவகங்கையின் வரலாறு ஒக்கூருக்கு தென் மேற்கே நாலு கோட்டை என்னும் ஊர் இருக்கிறது. அங்கு 17-ஆம் நூற்றாண்டில் சேதுபதிகள் ஒரு பிரதிநிதியை நியமித்து மூலமாக அவன் காளையார்கோவில், சிவகங்கைப் பகுதிகளை ஆண்டு வந்தார்கள். கிழவன் சேதுபதிக்குப் பிற்காலத் தில் அங்கு சேதுபதிகளுடைய பிரதிநிதியாக விளங்கி யவர் கன்று மேய்த்த உதயதேவர் என்பவர். அவர் நவராத்திரி விளையாட்டுகளில் கலந்து கொண்டு பல பந்தயங்களில் வெற்றி பெற்றார். அவருக்கு முத்து விசய ரகுநாத சேதுபதி தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு 3000 காலாட் படைகளுடன் பாளையக்காரராக காளையார்கோவிலில் வாழும் உரிமை பெற்றார். உதயத்தேவர் மகன் சசிவர்ணத்தேவர் சிறந்த வீர ராக விளங்கினார். பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம், திருப்பூவணம், முதலிய ஒன்பது கோட்டைகள் சசிவர் ணத் தேவரிடம் ஒப்புவிக்கப் பெற்றன. சேதுபதி பட்டத்திற்குரிய வாரிசு உரிமையில் குழப்பம் ஏற்பட்ட பொழுது சசிவர்ணத்தேவர் ஆதரவுடன் காத்தையா என்பவர் சேதுபதியானார். காத்தையா சேதுபதி,தம் நன்றியைத் தெரிவிக்க சிவகங்கையை ஒரு தனிச் சீமை யாக்கி அதன் அரசராக சசிவர்ணரை நியமித்தார். இராமநாதபுரம் சீமை ஐந்து பங்குகளாகப் பிரிக்கப் பெற்றது. அதில் இரண்டு பங்குகள் அடங்கிய பகுதி -