உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சிவகங்கைச் சீமையாக விளங்குகிறது. இதனுள் அடங் கியவை சிவகங்கை, திருப்பத்தூர் ஆகியவை. பிறகு சிவகங்கை அரசியாக இருந்த வெள்ளை நாச்சி யாரிடம் அதிகாரம் பெற்று மருது சகோதரர்கள் சிவகங்கையை ஆண்டனர். ஆங்கிலேயருக்கு விரோத மாகக் கலகஞ்செய்ததாலும், கட்டபொம்மனுக்கும் பாது காப்பு அளித்தாலும், இறுதியில் மருது சகோதரர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் தூக்கிலிடப்பட்டனர். சிவகங்கைச் சிற்றரசுக்குத் தலைவராயிருப்பதற்கு உரிய வர் கௌரி வல்லபதேவர் என்பதை ஆங்கிலேயர் அறிந் தனர். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியார் 1801- இல் அவரைச் சிவகங்கையின் சிற்றரசராக ஆக்கி முத்துவிசய ரகுநாத கௌரி வல்லபதேவர் என்ற பட்டத்தையும் சூட்டினர். அதுமுதல் சிவகங்கை ஆங்கி லேயருடைய ஆலோசனைப்படி, ஜமீன் ஒழிப்பு வரை இயங்கி வந்தது. இடையிடையே இதைக் குத்தகைக்கு எடுத்து வெள்ளைக்காரர்கள் ஆண்டனர். 1908- வரை P. Orr & Sons என்ற வெள்ளைக்காரக் கம்பெனியார் ஆளுகையில் சிவகங்கை ஜமீன் இருந்து வந்தது. இதை ஆர்துரை ஆட்சி என்று பாமர மக்கள் குறிப்பிடுவர். 19:0-இல் தம்புதுரை என்ற யாழ்ப்பாணத்தார் ஜ.சி.எஸ். அலுவலர், கோர்ட் ஆப் வார்ட்ஸ் கலெக்ட ராக இருந்தார். இவரே சிவகங்கை ஜமீனை நல்ல நிலை மைக்கு கொண்டு வந்தார். இவர் காலத்திலேயே நல்ல விளைவு ஏற்பட்டு, களஞ்சியங்கள் கட்டப்பட்டன. இதன் பயனாக சமஸ்தானம் அமைந்து திவான்கள் நியமனம் ஆயினர். இவர் காலத்தில் ஜமீன் எங்கும் நிலம் சர்வே செய்யப்பட்டது. வரி விதிப்பு முறை செட்டில் செய்யப் பட்டது. புதிய அரண்மனைக்கு அடிகோலப்பட்டது.