உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

477 உள்ளது. இவ்வூர்ப்பெயரிலிருந்து, இது ஏழாயிரம் பேர்க்கு வழங்கப்பெற்ற பண்ணையாக இருக்கவேண்டும் அல்லது ஏழாயிரம் பண்ணைகள் கொண்டதாக இருந் திருக்கலாம் என எண்ண வேண்டியதிருக்கிறது. (பண்ணை என்பது ஒருவகை நில அளவாக இருந்திருக்கக் கூடும்) ஊர்ப்பெயர்கட்கு எண் வழங்கும் வழக்கம் நிலவிய தற்குச் சான்றாக, திருநெல்வேலி மாவட்டம் தென்காசி ஒன்றியத்திலுள்ள ஆயிரப்பேரி,தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திலுள்ள எண்ணாயிரம், தென்ஆர்க்காடு மாவட்டத்துச் சிதம்பரம் வட்டத்தில் எண்ணகரம்; அம்மாவட்டத்திலேயே திருக்கோவலூர் வட்டத்தில் ஏழு செம்பொன் என்பனவும், முந்நீர்ப்பழந்தீவு பன்னீ ராயிரம், லட்சத்தீவு என்ற தீவுகளும் குறிப்பிடத் தக்கன. வணிகக் குழுக்கள் ஐநூற்றுவர், ஆயிரவைசியர் என அக்குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையால் குறிப் பிடப் பெற்றன. ஏழாயிரம் பண்ணைக்கு இளஞ்சிராப்பண்ணை' என்ற பெயரும் வழங்கிவந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் 'ஏழாயிரம் புளி' என்று இவ்வூர்ப்பெயர் அஞ்சல் நிலையத்தில் பொறிக்கப் பெற்றது. இவ்வூரின் ஒரு பகுதியான பழையூர் என்பதன் முழுப்பெயர் 'பழைய ஏழாயிரம்பண்ணை' ஆகும். சாத்தூரிலிருந்து செல்லும்போது, இப்பகுதியையே காணுகிறோம். இங்குள்ள சேர்ந்த தீபக்கிணற்று மதிலில் கல்வெட்டுக்கள் உள்ளன. முதலில் சிவன்கோயிலைச் தொன்மையான