உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 இவ்வூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ளதும் இனாமதுரைசாமிபுரம் ஊராட்சிமன்ற எல்லைக்குட் பட்டதும் ஆகிய சிவசங்குப்பட்டி என்ற சிற்றூரில் டி.எம்.பி. நடராசர் தோட்டத்தில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் இன்றும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக, இவ்வூரில் தமிழ்மொழியிலும் கலையிலும் புலமை பெற்ற பலர் வாழ்ந்திருக்கின்றனர். முயன்றால் இதைப்பற்றி விரிவான செய்திகளைத் தொகுக்க இயலும். பழையூரை அடுத்த செல்லியபுரத் திலுள்ள செல்லியம்மன் மீது, சைவத் தம்பிரான் ஒருவர் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். தனிப்பாடல் திரட்டில் பின்வரும் பாட்டுச் சேர்க்கப் பெற்றிருக்கிறது. இது கடிகை முத்துப் புலவர் இயற்றியதாகும். 'சென்றலந்தார் சேர்முத் திருளப்ப பூபதியான் மன்றலந்தார் வாங்கி வருமளவும் - குன்றமுலை ஏழா யிரம்பண்ணை யில்லுடம்பு வாடாதே ஏழா யிரம்பண்ணை யில்' 'முத்திருளப்ப பூபதியிடம் போய்ப் பரிசில் பெற்று வரும்வரை மேனி தளர்வடையாது, ஏழாயிரம் பண்ணை யூரில் மலை போன்ற முலையுடைய பெண்ணே இருப் பாயாக' என்று பொருள்படப் புலவர் இவ்வாறு பாடி யுள்ளர். 'ஏழாயிரம்பண்ணையில்' என்பது இரட்டித்து வருதலால் ஓரிடத்தில் 'ஏழாய் இரு அம்பு அண்ணையில் (மன்மத பாணம் அண்டி வரும்போது) என்று உரை காரர் கூறுவர். சுபாநாயக்கர் மகள் ரெங்கம்மாள் தன் காதலனைக் காணச் சென்ற போது இவ்வூரில் தங்கிச் சென்றதாக. வரலாற்றுச் செய்தி ஒன்று உண்டு. (விவரம்--