கண்ணதாசன் எழுதிய காண்க.) 479 ஊமையன் கோட்டையில் பாளையும் இப்பாளை தளவாய் அரியநாதர் ஏற்படுத்திய பட்டுக்களுள் ஏழாயிரம் பண்ணையும் ஒன்று; யக்காரக்கள் புலவர்களைப் போற்றியும் வளர்த்தும் வந்தனர். இசை அறிவு மிக்கார் இங்கே இன்றளவும் இருக்கின்றனர். கலைகளை பலர் . இவ்வூர்ப் பாளையக்காரர்கள், 1799-இல் நடை பெற்ற முதல் பாளையக்காரப் போரில் வீரபாண்டியக் கட்டப் பொம்மனை ஆதரித்தனர். இதனால் ஆங்கிலேயர் இவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து, கோட்டையையும் அழித்தனர். பாளையப்பட்டு உரிமை 1801-இல் ரத்து செய்யப்பட்டது. பாளையக்காரர் தம் ஆயுட்காலத்துக்கு நாடு கடத்தப்பட்டுச் சென்னை நகருக்கு விரட்டப்பட்டார். ஏழாயிரம் பண்ணைப் பாளை யப்பட்டுப் பகுதிகள் எட்டையபுரம் பாளையப்பட்டுக் கும் மணியாச்சி பாளையப்பட்டுக்கும் பங்கிட்டுக் கொடுக் கப்பட்டன. ஏழாயிரம்பண்ணை பாளையக்காரர் வாழ்ந்த மாளிகை. சிறிது சிதைந்த நிலையில் 'அரண்மனை' என்ற பெயரோடு இன்றும் இருந்துவருகிறது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறித்தவ மதம் இவ்வூரில் பரவிற்று. ரோமன் கத்தோலிக்கத் தேவாலயமும் தென் இந்தியத் திருச்சபையைச் சேர்ந்த தேவாலயமும் இவ்வூரில் உள்ளன. அதே நூற்றாண்டில் நாட்டுக் கோட்டைச் செட்டியார் சிலர் இங்கு தொழில் செய்தனர்; பிள்ளையார் கோயிலும் செட்டி தெப்பமும் அவர்களால் அமைக்கப் பெற்றவை. இவ்வூரில் மழை குறைவு: வீனிங் குளத்துக்கு அருகே மட்டும் நன்செய் வேளாண்மை நடைபெறுகிறது. புன்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/481
Appearance