உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 இவ்வட்டம் நெடுங்காலம் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து 1838-இல் திருநெல்வேலி மாவட்டத்துடனும் 19 1-இல் இராமநாதபுர மாவட்டத் துடனும் சேர்க்கப் பெற்றது. . வைணவத் தலம் என்ற காரணத்தால் நாயக்கர் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்ற ஸ்ரீ வில்லிபுத்தூர், ஆங்கிலேயர் ஆட்சியில் ஒரு டிப்டி கலெக்டரின் இருப் பிடமாயிற்று. சாத்தூர், சங்கரன் கோயில் வட்டங் களிலும் அதிகாரம் உடைய மாவட்ட முன்சீபின் நீதி மன்றமும் இங்கு ஏற்பட்டது. 1910 வரை இவ்வட்டம் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. அரசியல் விடுதலைப் போரில் இவ்வட்டம் முழுமூச்சுடன் ஈடுபட்டது. தொன்றுதொட்டு வாழும் மறவர்கள் எண் ணிக்கையால் மற்றவர்களைவிடப் பெரிய இனத்தார் ஆவர். நாயக்கர் ஆட்சியில் குடிவந்த தெலுங்கு பேசும் மக்கள் பல்லாயிரவர் ருக்கின்றனர். இவர்களுள் நாயக்கமார்களும் (நாயுடு சமூகத்தினர்), ராஜாக்களும் தம் பெருமுயற்சியால் தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்து இவ்வட்டம் செல்வம் கொழிக்கச் செய்துள் ளனர். இவர்களுடைய முயற்சி திருவினையானதற்கு ரயில் போக்குவரத்து, மின்சார வளர்ச்சியும் துணை நிற்கின்றன. யாதவர்களும் பிள்ளைமார்களும் இவ்வட் டத்தில் குறிப்பிடத்தக்க பிற இனத்தவர் ஆவர். மேற்குத் தொடர்ச்சி மலையும் அதனின்று சிதறிய சிறு குன்றுகள் பலவும் உள்ளன. குறிப்பிடத்தக்க ஆறு ஒன்றும் இல்லை. எனினும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து சிற்றாறுகள் வழியாய் நீர் வருவதால் வேளாண்மை செழிப்பாக உள்ளது. இம் மாவட்டத்தில்