483 கூடுதலாக நிலவரி செலுத்தும் வட்டம் இதுவே. வட்டத்தின் வடகோடியிலுள்ள வற்றாயிருப்பும் தென் கோடியிலுள்ள சேத்தூரும் நெற் களஞ்சியங்களாக விளங்குகின்றன. உகண்டாப் பருத்தி பெரிய அளவில் பயிரிடப்படுகிறது. - மேற்கு எல்லையிலுள்ள மலைகளில் (அப்பாலுள்ள தேவி குளம் - பீர்மேடு மக்களைப்போல) இவ்வட்டத் தினர் இரண்டாம் உலகப் போர்க் காலத்திலிருந்து ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், கொம்பரக்கு பயிரிடு கின்றனர். இதனால் இம்மலைப் பகுதி நிலங்களின் விலை ஏக்கர் 200 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்ந்திருக் கிறது. மாந்தோப்புக்களும் மலையடிவாரமெங்கும் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய சேத் ஊர் - ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில்தான் மாவட்டத்தி லேயே அடர்த்தியான வளமானகாடுகள் இருக்கின்றன. சில இடங்களில் கைத்தறி நெசவும் நூல் ஆலை களும் பருத்தி அறைக்கும் இயந்திரங்களும், சிறு பொறி யியல் தொழில்களும் இவ்வட்டத்தில் குறிப்பிடத் தக்கன. கூட்டுறவுத் துறையில் இவ்வட்டம் பெரு முன் னேற்றம் அடைந்திருக்கிறது. நெல், பருத்தி,மிளகாய் வேளாண்மையும், பல்வகைச் சிறு தொழில்களும் பஞ்சாலைகளும் கூட்டுறவு முறையில் நிகழும் சிறு நிறு வனங்களும் மக்களுக்கு வேலை தருகின்றன. விருதுநகரிலிருந்து தென்காசிக்குச் செல்லும் இரயில் பாதையும், மதுரையிலிருந்து தென்காசி வழி யாகக் கேரள எல்லைவரை செல்லும் நெடுஞ்சாலையும் ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் நகரங்களின் வழி யாக இவ்வட்டத்தினூடே செல்லுகின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/485
Appearance