485 யூசுப்கான் இப்பகுதியைப் பிடித்துக்கொண்டார். அந் நாளில் ஏற்பட்ட சூழலால் பழைய ஊர்கள் புதுப் பெயர்கள் பெற்றன. முகமதியரது செல்வாக்கின் நினை வாக ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு 5 கி. மீ. மேற்கே மகமத் சாகிப்புரம் என்னும் ஊர் உளது இவ்வூர்ப் பெயர் இப்போது மம்சாபுரம் என மருவி விட்டது. கான்சாகிப் புரம், சம்சிகாபுரம் என்பவையும் முகமதியரது செல் வாக்கைக் குறிக்கும் ஊர்களேயாம். பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆறு பட்டா ளங்கள் இப்பகுதியைக் காத்துவந்தன. அதைத் தொடர்ந்து கம்பெனி ஆட்சியும் பிறகு முறையான ஆங்கில ஆட்சியும் நிலவின. ரு ஸ்ரீ வில்லிபுத்தூர் இராஜபாளையம். ஆகிய இரு நகராண்மைக் கழகங்களும், இராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், வற்றாயிருப்பு என்ற மூன்று ஊராட்சி ஒன்றியங் களும் உள்ளன. ஸ்ரீ வில்லிபுத்தூர் நகரம் தலச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் உடைய நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர்; பாசன ஏரிகள் சூழவும் மேற் குச் தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் அமைந் திருக்கிறது. பாமாலையும் பூமாலையும் சூடிக்கொடுத்த ஆண்டாள் அவதரித்த நகரம் இது: பன்னிரு ஆழ்வாருள் ஒரு வாரகிய பேயாழ்வார் வாழ்ந்த பதியும் எடுத்துக் காட்டாக விளங்கும் தலமும் இதுவேயாகும். 3.000 பேர் சேர்ந்து இழுத்தால்தான் இழுக்கக் கூடிய முழுத்தேர் தமிழ் நாட்டில் இரு தலங்களில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/487
Appearance