உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 தான் இருக்கிறது. ஒன்று ஸ்ரீ வில்லிபுத்தூர். திருவாரூர், மற்றொன்று இந்நகர்க் கோயில்களைச் சுற்றிக் கோட்டைச் சுவர் கட்டப் பொற்கிழி வழங்கிய பாண்டியர் முதல் இங்கு தேரோடும் தெருக்களை உருவாக்கிய நாயக்கர் வரை பல அரசர்களின் வரலாற்றுடன் இந்நகரின் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. விசயநகர நாயக்க மன்னர் இங்கு வந்து வழிபட்டு ஆண்டாள் திருப்பாவையைத் தெலுங்கு மொழியில் பெயர்த்தார். திருவிதாங்கூர் மன்னர்கள் வழிபடும் திரு அனந்தபத்மநாப சாமி தொடர்பும் இந்நகர்க்கு உண்டு. வெளிநாட்டுத் தொடர்பும் இவ்வூருக்கு உண்டு. பாவை நோன்பு இங்கு தொடங்கி தாய்லாந்துவரை பரவியிருக்கிறது. அமைப்பு: திருவனந்த புரத்துக்கு (மதுரையிலி ருந்து) செல்லும் இரயில் பாதையும் நெடுஞ்சாலையும் ஸ்ரீ வில்லிபுத்தூர் வழியே செல்லுகின்றன. இராம நாதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய நகரமாகிய இராச பாளையம் இங்கிருந்து 10 கி.மீ. அந்நகரிலிருந்து இம் மாவட்டத்திலுள்ள எந்த இடத்திற்குச் செல்லவும் ஸ்ரீ வில்லிபுத்தூர் வழி ஒன்று மட்டுமே உண்டு. மதுரைக்குத் தெற்கே இந்நகர் கல்லுப்பட்டி வழி யாக 75 கி.மீ. (47மைல்) தொலைவு; மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் இந்நகரிலிருந்து 13 கி.மீ.இந்நகர்க்குரிய இரயில் நிலையம் 3 கி.மீ. தொலைவிலுள்ளது. சிவகாசி கிழக்கே 19 கி.மீ.விருது நகர் வடகிழக்கே 46 கி. மீ. தென்காசி தெற்கே 80 கி.மீ. ஊர்ப் பெயர்: ஸ்ரீ வில்லிபுத்தூர், சீ வில்லிபுத்தூர், செருவில்லிபுத்தூர், திருவில்லிபுத்தூர்,புதுவை, தென் புதுவை என்ற பெயர்கள் இவ்வூருக்கு உண்டு. வடபத்ர