உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 களின் வண்ண ஓவியங்கள் இரண்டாம் சுற்றில் இருக் கின்றன. கோயிலின் என்று நெற்களஞ்சியம் பெயர் பெற்றிருப்பது, திருக்கொட்டாரம் திருவிதாங்கூர்த் தொடர்பைக் குறிக்கிறது. இரண்டாம் பாளையக்காரப் போரின்போது, கி. பி, 1800-இல், தளபதி கான் சாஹிப் இக்கோயிலைக் கொள்ளையிட முயன்றதால், விக்கிரகங்கள் பாதுகாப்புக்காகத் திருவனந்தபுரத் திற்குக் கொண்டு போய் வைக்கப்பட்டன. கோயிலின் ஆட்சியும் 1850 வரை திருவிதாங்கூர் மஹாராஜாவின் பொறுப்பில் இருந்தது. மேல்தடாகத்தில் வடபத்திர சயனர் திருவுருவம், திருவனந்தை அனந்தபத்மனாபா திருவுருவத்தைப் போலச் சமைத்துப் பிரதிட்டை செய்யப் பெற்றது. . இக்கோயில் திருப்பணி செய்தவர்களுள் திருமலை நாயக்கர் குறிப்பிடத்தக்கவர். அவர் கைவண்ணத்தை இங்குள்ள சிற்பங்களில் காணலாம். யாளிகள் உள்ள பெரிய தூண்களும் யாளி, சிங்கம், யானை மூன்றும் ஒன்றின்மேல் ஒன்று நிற்பதுபோன்ற சிற்பமும் இங்கு உள்ளன. முக்கோணங்களிலிருந்து பார்த்தால் தெரியக் கூடிய காட்சியை ஒருவகைக் கண்ணாடி அணிந்து பார்க் கக்கூடிய மூன்று டைமன்ஷன் படங்கள் இந்நாளில் வெளிவருகின்றன. இக்கோயில் சிற்பங்களிலும் இவ் வாறு நீளம், அகலம், உயரம் யாவும் ஒருங்கே தெரியும் படியான அமைப்பு உளது. ஒவ்வொரு மூலையிலிருந்தும் பார்த்தால் காட்சியில் சில வேறுபாடுகள் தெரியும். திரு முக்குளத்தில் ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தில் எண்ணெய்க் காப்பு விழா நிகழும். அதற்காகச் சந்தனாதித் தைலம் தயாரிக்கின்றனர். இது இது சத்து நிறைந்தது. கோவிலில், விலைக்கு விற்கப்படுகிறது.