489 ஆண்டுதோறும் புரட்டாசி கருடசேவையில் ஆண்டாளுக்குச் சூட்டிய மாலையை, திருப்பதி ஏழுமலை யானுக்கு அனுப்புகின்றனர். திருப்பதியிலிருந்தும் ஆண்டாளுக்கு வரிசைகள் வருகின்றன. நாய்ச்சியார் கோயில் கட்டப்பட்டிருக்கும் இடத் தில் பெரியாழ்வாரின் திருமாளிகை இருந்ததென்பர் பாண்டியர், சோழர் முதலிய மன்னர்களால் விரிவாக் கப்பட்டிருப்பினும் பெரியாழ்வாரே இக்கோயிலைக் கட்டித் தம் காலமான 18-ஆம் நூற்றாண்டு வரை நடை முறைகளை மேற்பார்த்து வந்தாராம். இதன் நினைவாக இன்றும் ஆடிப் பூரம் ஏழாம் திருநாளில் நெல் அளப்பது என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மார்கழி மாதத்தில் திருப்பாவை ஓதப்படுகிறது. பகல் பத்து. இராப்பத்து என்ற திருவிழாக்கள் நிகழ் கின்றன. பங்குனி உத்தரத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இக்கோயிலில் சுக்கிரவாரக் குரடு இருக்கிறது. இதில் வெள்ளி தொறும் ஆண்டாளும் ரங்கமன்னாரும் ஊஞ்சலில் ஆடுவர். மாதவி பந்தல், கண்ணாடிக் கிணறு, நந்தவனத்தில் உள்ள திருப்பூர மண்டபம் ஆகியவையும் கண்ணத் தக்கன. வடபத்ர சயனர் கோயில்: இக்கோயில் கோபுரம் மிக வும் புகழ் பெற்றது. புகழுக்குக் காரணம் அது 192 அடி உயரம் இருப்பதாகும். 217 அடி உயரமுள்ள திருவண்ணா மலைக் கோபுரத்துக்கு அடுத்தபடி, தமிழ் நாட்டில் உயர மான கோபுரம் இதுவே. 1960 வரை ரூபாயின் பகுதி களாக அணா பைசா என்ற சில்லறை நாணயங்கள் இருந்தன. ஒரு ரூபாய்க்கு 16 அணா. ஒரு அணாவுக்கு இ -31
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/491
Appearance