490 பைசா. 12 பைசா. எனவே ஒரு ரூபாய்க்கு 192 ஸ்ரீவில்லிபுத்தூர்க் கோபுரம் 192 அடி உயரமுடைய தால், முழுரூபாயாக விளங்குகிறது என்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும்போது சொல்லிவந்தனர். இப்போது அணாவும் பைசாவும் மறைந்து விட்டன. அடி, கெஜம் என்பன போய் மீட்டர் என்ற நீட்டலளவை வந்து விட்டது.கோபுரமும் புதுப்பித்துப் பாதுகாக்க வேண்டிய நிலையிலுளது. இக்கோபுரத்தின் நிலைக்கால் ஒன்றில் காணப்படும் கல்வெட்டுச் செய்யுள், இக்கோபுரத்தை மேரு மலை யுடன் ஒப்பிடுகிறது. கோபுர வாயிலருகே பெரியாழ்வார் சந்நிதி இருக் கிறது. இக்கோயிலில் இந்தச் சந்நிதிக்கு முக்கியத் துவம் மிகுதி. மூலஸ்தானம் உயர்ந்த மேடைமீது இருக்கிறது. இம் மேடையில் காணப்படும் பகல் பத்து என்ற மண்டபத் தில் மரவேலைப்பாடு அருமையானது. மூலவர் அருகே வில்லி,கண்டன் திருவுருவங்கள் உள்ளன. இங்குள்ள உற்சவர்கள் வருமாறு: . சக்கரத்தாழ்வார், வீதியாரவருவார், வில்லிபுத்தூர் உறைவார், அல்லல் விளைத்த பெருமாள். ஆண்டாளுக் குக் காதல் நோய் தந்து அல்லல் விளைத்ததால் பெரு மாளுக்கு இவ்வாறு பெயர் வந்தது. மூலவராகிய பெருமாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி அடிவருடச் சேவை சாதிக்கிறார். இக்கோவிலுக்கும் நாச்சியார்கோவிலுக்கும் இடையே இரண்டையும் இணைப்பதாய் ஒரு நந்தவனம் இருக்கிறது. இங்கிருந்துதான் ஆண்டாள் எடுத்து வளர்க்கப் பெற்ற
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/492
Appearance