உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

491 தாக ஐதீகம். ஆண்டாளின் அவதார தலம் இதுவே என்பர். வட பாலீசுவரர் கோயில் என்ற பெயரில் வட பத்ர சயனர் கோயில் சிவன் கோயிலாக இருந்தது என்று சிலர் கருதுகிறார்கள். சயனத்திற்குப் பின் புறம் சுவரில் லிங்கம் மறைந்து இருப்பதாகக் கூறுவர். நாடகசாலைத் தெருவிலுள்ள கிருஷ்ணன் கோவிலே பழைய வைணவர் கோயில் என்பர். மடவார் விளாகம்: ஸ்ரீவில்லிபுத்தூரின் தென்பகுதி மடவார் விளாகம் எனப்படும். இங்கு ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். சமீப காலம்வரை சுற்று வட்டத்துக் குறுநிலமன்னர்களின் ஆதரவு பெற்ற விலைமகளிர் இங்கு வாழ்ந்து வந்திருக் கின்றனர். பெண்கள் நீராடும் குளம் இங்கு நன்முறை யில் அமைக்கப்பெற்றிருக்கிறது. ற வைத்திய நாத சுவாமி கோயில்: மடவார் விளாகத்தில் வைத்திய நாத சுவாமி பெயரால் பெரியதொரு சிவன் கோயிலும், அதன் உட்கோயிலாகச் சிவகாமி அம்மன் கோயிலும் உள்ளன. இங்கு கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் காணப்படு கின்றன. . வைத்தியநாத சுவாமியை வழிபட்டு, திருமலை நாயக்க மன்னன் வயிற்றுவலி நீங்கப் பெற்றதால் இக் கோயிலுக்கு அவன் நன்முறையில் திருப்பணி செய்வித் த்தாகக் கூறப்படுகிறது. இக்கோவில் மண்டபத்தில் இரு மனைவியருடன் திருமலை நாயக்கரது உருவச்சிலை உளது. தமிழ் நாட்டிலுள்ள உருவச்சிலைகளுள் இதுவே பெரியது என்பர். இங்கே பூசை நடந்த பிறகே திருமலை நாயக்கர் உணவு உண்பாராம். அதற்காக