உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 இங்கு ஒரு நகரா மண்டபமும் மதுரை வரை மைலுக்கு ஒரு மண்டபமாக 40 மண்டபங்களும் அமைத்திருந்தார். முத்து விசயரங்க சொக்கப்ப நாயக்கர் உருவச்சிலையும் இங்கு காட்சி தருகிறது. வரலாறு; திருமலை நாயக்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரை அழகு படுத்துவதில் ஆர்வம் காட்டினார். மதுரை யில் அவர் கட்டியுள்ள மஹாலின் பாணியில் பெரிய தூண்களுடைய சிறிய மாளிகை ஒன்றைத் தெற்கு ரத வீதியில் கட்டியுள்ளார். மாவட்ட முன்சீபின் நீதிமன்ற மும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்ட அலுவலகமும் இந்த மண்டபத்தில்தான் இயங்கிவருகின்றன. அருகேயுள்ள யானைக்கால் மண்டபம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வின் அலுவலகமாக இருந்து வருகிறது. . ஒவ்வொரு சாதிக்கும் ஓரிரு தெருக்கள் உள்ளன. சான்று: தேவர் தெரு, சாத்தானியார் தெரு,பிள்ளை மார் தெரு, சாலியர், தரக்னார், பன்னாடி என்ற பெயருள்ள வகுப்பினர் ஐந்து பட்டிகளில் (தெருக்களில்) வாழ்கின்றனர். இந்நகர் வடக்குத் தெரு தேவார மடத்தில் மனோன் மணியம் சுந்தரம் பிள்ளையின் ஆசிரியரான கோடக் நல்லூர் சுந்தர சுவாமிகளின் படம் உளது, மனோன் மணிய நாடகத்தில் 'சுந்தரர்' என்ற பாத்திரமாக அப் படம் படைக்கப்பட்டிருக்கிறது. 1900-ஆம் ஆண்டுவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு டிப்டி கலெக்டரின் இருப்பிடமாகவும் இருந்து. 1899 சூலையில் சிவகாசியில் நாடார்களுக்கும் தேவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரிய கலகமாக மூண்டது. அதை ஒடுக்குவதற்காக, ஆங்கிலேய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. அதன் பயனாக',