498 காங்கே அவர்கள் குடியேறவும் நிலைத்து வாழவும் வழி வகை செய்தனர், சிலர் இடம் விட்டு இடம் மாறி புதிதாகக் குடியேறிய வண்ணமாக இருந்தனர். இராஜ பாளையத்திற்கு 10 கி.மீ. கிழக்கே ராஜ குலராமன் என்னும் சிற்றூரில் சின்னராஜா என்ற கிருஷ்ணம்ம ராஜா மேற்குத் தொடச்சி மலைக்கு வேட்டையாடச் சென்றார். அவருடைய வேட்டை நாயும் உடன் சென்றது. வேட்டை நாயை ஒரு முயல் விரட்டியது. நாயை முயல் அச்சுறுத்தும் வியத்தகு நிகழ்ச்சியால் கவரப்பட்ட சின்னராஜா தம் ஆட்களுடன் அந்த இடத்தில் குடியேறி, இராஜபாளையத்தைத் தோற்று வித்தார். இது பிறிதொரு கருத்து. ஆந்திர மாநிலத்திலிருந்து புறப்பட்டுப் பல ஊர் களில் தங்கி, கடைசியாக ராஜுக்கள் நிலையூன்றிய டமே இராஜபாளையம் என்று தெரிகிறது. பழைய பாளையம் என இந்நாளில் வழங்கும் பகுதியிலேயே இவர்கள் இருந்தனர். இவர்களுடைய வீரச் செயல் களைப் பாராட்டி, சொக்கநாத நாயக்கர் ஓர் இனாம் சாசனம் வழங்கியதாயும் பின்னர் புதுப்பாளையம் ஏற் பட்டதாகவும் கூறுகின்றனர். போர்த் தொழிலில் சிறந்து விளங்கிய இவர்கள் பின்னர் ஏர்த் தொழில் புரிந்து அதிலும் ஏற்றம் பெற்றனர். நாய்: இராஜபாளையம் நாய் என்ற சாதியை ராஜாக்கள் வளர்ந்து வந்தனர். இது காவலுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. வெள்ளை அல்லது சிவப்பு நிறத் தில்; நீண்ட முகத்துடன் இது அமைந்தது. மணலில் இதைப் படுக்கவிட மாட்டார்கள். நாள்தோறும் 'சோப்' போட்டுக் குளிப்பாட்டுவார்கள். இதை வளர்ப்பதற்குப் பெரும்பணம் செலவிட்டனர். இராஜபாளையம் நாய்க் குட்டி 150 ரூபாய் வரை விற்று வந்தது. பல தொழில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/498
Appearance