497 களில் புகுந்தபிறகு, நாய் வளர்ப்பதை ராஜாக்கள் கை விட்டனர். அது அது இப்போது அவர்கள் மறந்துவிட்ட கலை. கி ஐயனார் அருவி: இராஜபாளையத்துக்கு மேற்கே 13கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை இருக் றது. மலையேறவும் உல்லாசப் பொழுது போக்கவும் வேட்டையாடவும் ஏற்ற இடம். மலைத் தொடரின் உச்சி 5,000 அடி. அந்த உயரத்திலிருந்து வேனிற் காலத்தில் நடுப் பகலில் தேக்கடி நீர்த்தேக்கம் தெரியும். ஓங்கி வளர்ந்த மரங்கள், விரிந்து படர்ந்த பசுங் கொடிகள், தென்றல் காற்று- இந்தச் சூழலில் ஐயனார் அருவி உளது. இங்கு குடும்பத்துடன் சென்று வருவதை வனபோஜனம் போவது என்று இப்பகுதியினர் குறிப் பிடுவர். அருவிக்கு அருகே. ஐயனார் கோவில் இருக் கிறது. ஹரிஜனங்கள் இங்கு நடத்தும் திருவிழாவில் ஏனையோரும் கலந்து கொள்கிறார்கள். சஞ்சீவிமலை; நகரின் கிழக்கு எல்லையில் அமைந் துள்ளது. அநுமன் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பியபோது சிதறி விழுந்த மலையின் ஒரு சிறு பகுதி என்பர். மலைமீது எழிலார் தோற்றமுடைய முருகன் கோயில் உளது. குகைகளும் மூலிகைகளும் நிரம்பிய இம் மலையில் திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்று கிறார்கள். அநுமன் இளைப்பாறிய இடம் என்று நம்பி, பக்தர்கள் இம்மலையில் சில இடங்களை வழிபடுகின்றனர். வேளாண்மை: இம் மாவட்டத்தில் இங்குதான் கூடுத லாக மழை பெய்கிறது. நெல்லும் கரும்பும் மணிலாக் பயிரிடப்பெறுகின்றன. கடலையும் மிகுதியாகப் இவ்வட்டாரத்தில் 20,000 டன் வெல்லம் காய்ச்சி வட செய்கிறார்கள். ஏற்றுமதி இந்தியாவுக்கு அரைக்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/499
Appearance