உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பொருளாழமும் உள்ளது. இம்மாவட்டம் தொன்மையான வரலாற்றுப் பெருமை உடையது என்பதை ஆசிரியர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். என்னே அவரது ஆராய்ச்சித் திறன்? வட்டம் வாரியாக, ஒவ்வொன்றின் பூகோள நிலை, வரலாற்றுப் புகழ், இயற்கை வளங்கள், சமுதாய நிலை, சமுதாய வளர்ச்சித் திட்டங்கள், கல்விச் சாலைகள், மருத்துவச் சாலைகள், ஆலயங்கள், சுற்றுலாச் சிறப்புப் பெற்ற இடங்கள் முதலியவற்றையெல்லாம் நேரில் சென்று விசாரித்தறிந்தும், ஆங்காங்கு வழங்கிவருகின்ற தொன்மை யான பாடல்களைக் கொண்டும், அரசியலார் தரும் சரியான புள்ளி விவரங்களைக் கொண்டும், பல செய்திகளைச் சேகரித்து இம்மாவட்ட நூலை வெளியிட்டுள்ளார்கள். இம்மாவட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவர் வீட்டிலும் இந்த நூலின் பிரதி ஒன்று அவசியம் இருத்தல் வேண்டும். ஆண், பெண், மாணவ மாணவியர் அனைவரும் இந்நூலைப் படிக்கவும் வேண்டும்; பரப்பவும் வேண்டும். தான் வாழு கின்ற மாவட்டத்தைப் பற்றித் தெரியாத நிலையில் மற்ற நாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதால் என்ன பயன்? இம்மாவட்டத்திலுள்ள கல்விச்சாலைகள் அனைத்திலும் இந்த நூலைக் கட்டாயத் துணைப் பாடமாக வைக்கக் கல்வித்துறை ஆவன செய்தால் இம்மாவட்ட மாணவர் அனைவரும் நல்ல பயனடைவர் என்பது திண்ணம். மேலும், வட்டம் வாரி யாகச் சொல்லப் பெறும் வளர்ச்சித் திட்டங்கள், நீர்ப் பாசனம், போக்கு வரத்து, தொழில் துறை முதலிய துறை களில், ஆங்காங்கு ஆசிரியரவர்கள் சில ஆக்க ரீதியான யோசனைகளையும் கூறியுள்ளார்கள். உதாரணமாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், பாம்பன் ரஸ்தாப் பாலம் அமைத்தல், மானாமதுரை தூத்துக்குடி இருப்புப் பாதை யமைத்தல் முதலிய யோசனைகளைச் செயல்படுத்தினால், இம் மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகள் எல்லாம் வளமான முன்னேற்றமடையும் என்பது உறுதி.