இந்நூல், மாணவர்க்கு மட்டுமன்றி அரசியலார்க்கும் மிகவும் பயன்தரத் தக்க நூலாக அமைந்துள்ளது. இம் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற 2.றுப்பினர்கள் யாவரும் இந்நூலைப் படித்தறிந்து அவரவர்கள் தொகுதியில் மக்கள் முன்னேற்றத்திற்கு ஆக்க ரீதியாக என்னென்ன நன்மைகள் செய்யக் கூடுமென்பதை உணர்ந்து செயல்படுவ ராயின், இம்மாவட்டம் எல்லாத் துறைகளிலும் சிறந்த முன்னேற்றமடையும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு வட்டத்திலும் எந்தச் சிற்றூரையும்கூட விடாமல், எல்லா ஊர்களையும் பற்றிய குறிப்பும், அவற்றின் பெயர்க் காரணமும், ஆராய்ச்சியறிவால் ஆசிரியர் ஆங் காங்கே விளக்கமாகத் தந்துள்ளனர். நகரத்தார் பெருமக்களுள் ஒருவராகத் தோன்றிய அன்பர் 'சோமலெ' அவர்கள் தமது கூர்த்த மதியாலும், சிறந்த தமிழ்ப் புலமையாலும், விரிந்த சுற்றுப்பிரயாண அநுபவத்தாலும், தமிழ்த் தாய்க்குச் செய்துள்ள அரும்பெரும் தொண்டுகளுள், தமது சொந்த மாவட்ட நூலையும் பல வகைச் சிறப்புக்களுடன் வெளியிட்டமை குறித்து, எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள், இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, தமிழ்நாடு பயன்பெறும் வகையில், இன்னும் பல நூல்களை ஆக்கித்தர எங்கள் தெய்வமாகிய ஸ்ரீ இராஜராஜேஸ்வரியின் வணங்கி வாழ்த்துகிறேன். குல் திருவடிகளை மாவட்ட மக்கள் இந்நூல் மலரை நுகர்ந்து மணம் பெறுவராக! ராமநாதபுரம், 22-4-1972. } S. இங்ஙனம் இராமநாத சேதுபதி பர்வத வர்த்தினிதாசன். இராமநாதபுரம் மன்னர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/6
Appearance