உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ்நாடு மாவட்ட வரிசை நூல்களை யான் 1958இல் எழுதத் தொடங்கினேன். 1964வரை எட்டு மாவட்டங் களைப்பற்றி நூல்கள் வெளிவந்தன. பின்னர் மாவட்டங்களைத் திருத்தியமைப்பதாக அரசினர் அடிக்கடி கூறினர். அவ்வாறு அவர்கள் அமைக்கட்டும் என்று பொறுத்தேன். அலை நிற்பது எப்போது? நீச்சுப் பழகுவது எப்போது? என்பதே என் நிலை. பயணஞ்செய்தும் நூல்களைப்படித்தும் முதிர்ந்த வயதின ரான பெருமக்களிடம் பேசியும் தமிழ் நாடெங்கும் சுற்றிய தால் உற்று நோக்கியும் ஒப்பிட்டுப் பார்த்தும் யான் குறித்து வைத்தவை பல துளி பெரு பெரு வெள்ளமாகப் பெருகின. இவ்வாறு தொகுத்துக் கொண்டே போனால் காகித மூட்டை கள் குப்பைத்தொட்டிக்கே உதவும் என்ற எண்ணமும் இடை யிடையே ஏற்பட்டது. எலிக்கும் பாச்சைக்கும் அவை இரை யாகும் நிலையை அடைந்துவிட்டன. என்னைத் தவிர யாருக் கும் அக்குறிப்புக்கள் புரியா! பல்வகையான பல அளவான தாள்கள், வேறுபட்ட எழுதுகோல்கள், பறக்கும் பயணங்களில் கிறுக்கியன, பகலுணவுக்கு ஊடேயும் நள்ளிரவில் தூக்கத் துக்கு இடையேயும் குறிப்பாக எழுதிவைத்த மலர்களை யானே மாலையாகத் தொடுக்க முடியும்/ . . சில வட்டங்களைப் பற்றிச் செய்திகள் குறைவாக இருக்க லாம். கிடைத்த விவரங்களை வெளியிட்டிருக்கிறேன். நூலின் பல இடங்களில் ஆங்கிலச் சொற்களையும்,தமிழ் நாட்டுக்குப் புறம்பானவை எனத் தவறாகக் கருதப்படும் ஸ, ஹ,ஷ போன்ற எழுத்துக்களையும் பயன்படுத்தியுள்ளேன். கருத்துக்களைத் தெரிவிப்பதும் படிப்பவர்களுக்கு எளிதில் புரிய வைப்பதுமே என் குறிக்கோள். பல செய்திகளை எனக்குக் கூறிய நண்பர்கள், புலவர்கள். அறிஞர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆகியோருக்கு என் வணக்கம் உரியது. அவர்களுடைய அக்கறையும்