ஒத்துழைப்பும் இன்றேல் இவ்வளவு விவரங்களைப் பலரும் அறிய வாய்ப்பு ஏற்பட்டிராது. தமிழ் நூல்களின் விற்பனை மங்கியிருக்கும் இந்நாளில் விரிவான பெரிய நூலை அச்சிட முன்வந்த அருமை நண்பர், பாரிநிலைய உரிமையாளர் திரு.க.அ.செல்லப்பன் அவர் களு டைய துணிவைப் போற்றுகிறேன். மாருதி அச்சக உரிமையாளர் திரு. விநாயகம் அவர்களுக்கும் தொழிலாளர் களுக்கும் என் நன்றி. நூல் அச்சாகுங்கால் யான், அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியதாயிற்று; அப்போது அச்சு வேலையை மேற்பார்த்தவர் என் இனிய நண்பர் சண்முக நாதபட்டணம் திரு. சுப. நல்லகருப்பன் அவர்கள் ஆவார் கள். நூல் உருவாவதற்கு உதவிய ஏனைய பலருடைய உதவி களையும் பாராட்டுகிறேன். 80 கோவில்களையும் 200 சத்திரங்களையும் இவை தவிர 400 அற நிறுவனங்களையும் நடத்திவருகின்ற சேதுபதிகள் பரம்பரையில் உதித்து, அந்தக் குடும்பத்துக்கு மேன் மேலும் புகழும் பெருமையும் சேர்த்து வரும் இராமநாதபுரம் அரசர் எஸ்.இராமநாத சேதுபதி அவர்கள் இந்நூலுக்குச் சிறப்புரை தந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்த்து என்னை இத்தொண்டில் ஊக்கு விக்கும். சேதுபதி அவர் கட்கு என் பணிவான நன்றியையும் வணக்கத்தையும் தெரி வித்துக் கொள்ளுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளி வந்திருக்க வேண் டிய இந்நூல் இப்போதுதான் அச்சு வடிவம் பெறுகிறது. ஆவலுடன் இந்நூலை எதிர்பார்த்த வாசகர்களின் பொறு மைக்கு நன்றியன். "அடுத்து முயன்றாலும் ஆகு நாளன்றி எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா" சென்னை தமிழ்ப்புத்தாண்டு, 1972 } 'சோமலெ'
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/8
Appearance