499 தகடு தொழிற்சாலை, கலப்பை செய்யும் நிலையம் ஆகிய வையும் இயங்குகின்றன. இந்நூலின் முன்பகுதியில் விவரம் காண்க. வாணிகம்: அருகேயுள்ள காடுகளில் கிடைக்கும் தேக்கு, தோதகத்தி மரங்களும் சந்தனக் கட்டையும் ஏலக்காயும் தேனும் இராஜபாளையத்தில் யாகின்றன. மரவாடிகள் ஏராளமாக வியாழக்கிழமை பெரிய சந்தை கூடுகிறது. விற்பனை உள்ளன. கல்வி: மாவட்டக் மாவட்டக் கழகம் முதலில் உயர் நிலைப் பள்ளி ஏற்படுத்தியது இந்நகரில்தான். இப்பள்ளியில் தெலுங்கு மொழியும், வணிக நிலையங்களில் சேர்ந்து வேலை பார்க்க உதவும் படிப்பும், பொறியியல் பாடங் களும் கற்பிக்கப்படுகின் றன. கல்லூரியில்லாக் குறை இந்நகரின் பெரிய குறைபாடு. மொழி: தெலுங்கும் தமிழும் இந்நகரில் இணைந்து வளர்கின்றன. பொங்கலும் புதியலும் கொண்டாடப் படுகின்றன. தெலுங்கு, தமிழ் இரு புத்தாண்டுகளும் இந்நகரில் விழா நாட்கள். தேசியம்: தன்னலமற்ற பெரியாரும் அரசியல் தலைவரும் நேர்மை யான ஆட்சியாளருமாக விளங்கிய பூ. ச. குமாரசாமி ராஜா (1898-1957). அவர் தலைமையில் தேசிய உணர்ச்சி அகில பாரத இந்நகரில் காட்டுத் தீ போலப் பரவிற்று. சர்க்கா சங்கம் ஏற்படு முன்னரே, இந்நகரில் கதர் வேலை தொடங்கிற்று. கதர் என்றால் வங்காளம் சாக்குப்போல் முரட்டுத் துணியாக இருக்கும் என்று மக்கள் நினைத்த நாளில், மெல்லிய கதரை உற்பத்தி செய்தது இராஜ பாளையம்தான். இராஜபாளையத்திற்குப் பெருமை தந்தவர்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/501
Appearance