உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 வெளிநாட்டுத்துணி மறியலிலும் கள்ளுக்கடை மறியலிலும் இந்நகரில் பச்சிளம் பாலகரும் ஈடுபட்டுத் தங்கள் தந்தைமார் நடத்திய கடைகளுக்கு முன்னும் அறப்போராட்டம் நடத்தினர். 1942-இல் நிகழ்ந்த இறுதிக் கிளர்ச்சிகளில் இந்நகர் திரு. வசந்தம் முதலிய பலர் மனிதத்தன்மையற்ற சித்திரவதைக்கு ஆளாக்கப் பெற்றனர். சுருங்கக் கூறின், நாட்டு விடுதலை இயக்கத் தில் இராஜபாளையத்தின் பங்கு பெரிது. - போர்த் இந்நகரின் பெருமைகள்: ஏர்த்தொழில் தொழில் - இயந்திரத் தொழில் ஆகிய மும்முனைகளிலும் ஏற்றம் பெற்றிருப்பது, பூபதி ராஜா கூட்டுறவு பேங்கு; காந்தி கலை மன்றம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் வில்லிபுத்தூர், மல்லி பிரிக்காக்களடங்கியது இவ் வொன்றியம். அலுவலகம் வில்லிபுத்தூரையடுத்த மடவார் விளாகத்தில் இருக்கிறது. ம.தொ.75,000 பரப்பு 116 ச.மைல். மழை குறைவு. மம்சாபுரத்தில் பேரூராட்சியும் 28 ஊராட்சி மன்றங்களும் உள்ளன. மம்சாபுரம் பகுதி வளமானது. கம்பு, சோளம் பருத்தி, கடலை, வாழை தவிர இருபோகம் நெல் பயிரிடு கின்றனர். இங்கும் அழகர் கோயிலிலும் அடர்த்தியான காடுகள் இருக்கின்றன. செண்பகத் தோப்புப் பகுதி மா, பலா முதலிய பழத்தோட்டங்கள் நிறைந்தது. வில்லிபுத்தூர்க்கும் இராஜபாளையத்திற்கும் இடையே வைத்திலிங்கபுரம், இராமகிருஷ்ணாபுரம் இரயில் நிலையங்கள் உள. ஆறுகள் இல்லை. வில்லிபுத் தூர்ப் பெரிய குளம் மட்டுமே பெரிய ஏரி. கூட்டுறவு நூல் ஆலை, செங்கற் சூளைகள், கொத்தங்குளத்தில்