உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

501 மத்தாப்பூ. வாணத் கின்றன. தொழிற்சாலைகள் செயல்படு சில ஊர்களில் கூட்டுறவு வங்கிகள் உள்ளன். பனைவெல்லமும் கரும்பு வெல்லமும் காய்ச்சப்படுகின்றன. . கிருஷ்ணன் கோவில் அருகே பெரிய பெரிய தாழிகள் அகப்படுகின்றன. அச்சந் தவிர்த்தான், படிக்காசு வைத்தான்பட்டி என்னும் ஊர்கள் உள்ளன. நீண்ட இழைப் பருத்தி ஆராய்ச்சித் திட்டம் இவ்வொன்றியத் தில் அமல் செய்யப்பட்டிருக்கிறது. தென்கிழக் அத்திகுளம்: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து குத் திசையில் சுமார் இரண்டுகல் தொலைவில் உள்ளது. இவ்வூர்க் குளத்துக் கரையில் பெரிய அத்திமரம் இருந்த தால் இதற்கு அத்திகுளம் எனப் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். இவ்வூர்க்கு அருகில் உள்ள சிற்றாலம் புத்தூர் என்னும் சிற்றூரில் பெரிய ஆலமரம் இருப்பதும் இதற்குச் சான்றாகும். அத்திகுளத்தில் இருபதாம் நூற் றாண்டின் முற்பகுதியில் இராமாநுச சுவாமிகள் என்ற துறவி ஒருவர் இருந்தார். இவர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். பிரம்மச் சூத்திரத்தை விரிவுரை யுடன் வடமொழியிலிருந்து தமிழில் பெயர்த்துள்ளார். இவர் சித்திரக் கவி பாடுவதில் வல்லவர். மதுராந்தகம் வட்டத்தில் உள்ள கெசப்பாக்கம் என்ற ஊரில் பரம்பத மடைந்தார். 11 கி. மீ. அழகர்கோயில்: வில்லிபுத்தூரிலிருந்து தொலைவில் கண்மாய்களுக்கு நடுவே அமைந்தது. மலை மீது, திருமலை நாயக்கர் கட்டிய கோவில் இருக்கிறது. செண்பகத் தோப்பு. சறுக்கம்பாறை, மலையருவி. முதலியார் ஊற்று, சந்தன மரங்கள் ஆகியவை காணத் தக்கவை. செண்பகவல்லி அம்மனுக்கு வழங்கப்பெற்ற தால் அவ்வாறு பெயர்பெற்ற தோப்பில், பளியர்