உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 என்னும் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்களைப் போன்றே - ஆனால் பிளாஸ்டிக்கில்-குடிசை கட்டிக் கொண்டு ஓர் அமெரிக்கர் இங்கு இவர்களுடன் ஓராண் டுக் காலம் தங்கி இவர்களுடைய வாழ்க்கை முறைகளை ஆராய்ந்துள்ளார். ஆலங்குளம்: கீழராஜ குலராமனிலிருந்து 6 கி.மீ. தொலைவு. சுண்ணாம்புப் படிவங்கள் நிறைந்தது. அரசினர் சிமிண்டு ஆலை தொடங்கியுள்ளனர். சுற்று வட்டத்தில் கரிசல் பூமியில் பருத்தி விளைவு சிறந்து நடைபெறுகிறது. இராமச்சந்திரபுரம் (சென்னங்குளம்): தேசிய உணர்ச் சியாலும் உகண்டா விளைவாலும் புகழ்பெற்றது. கிருஷ்ணன் கோவில்: வில்லிபுத்தூருக்கும் வற்றாயிருப் புக்கும் நடுவே அமைந்தது. பல சாலைகள் கூடும் இடம். கீழராஜகுலராமன்: ஆரம்ப சுகாதார நிலையம் உளது. வன்னியர்க்கும் நாயக்கமார்க்கும் ஏற்பட்ட பூசலைத் தவிர்க்க ராஜாக்கள் வரவழைக்கப்பட்டனராம். அவர்கள் பெயரால் இவ்வூரும் இராஜபாளையத்துக்கு அருகே மேலராஜகுல ராமனும் ஏற்பட்டன. வில்லிபுத்தூருக்கு திருவண்ணாமலை: வடமேற்கே ஐந்து மைல் தொலைவு. குன்றின்மீது வேங்கடாசலபதி கோவில் என்ற சீனிவாசப் பெருமாள் கோவிலும் அடி வாரத்தில் சுற்றி கோனேரி என்ற அழகான குளமும் உள்ளன. குன்றில் புரட்டாசிச் சனிக்கிழமையில் கூட்டம் மிகுதியாகக் கூடுகிறது. துறவிகள் சிலர் வசிக்கின்றனர். இங்குள்ள விநாயகர் 12 அடி உயரம் 8 அடி அகலமும் உடையது. உலகிலேயே பெரிய பிள்ளையார் திருவுருவம் இதுவே என்பர். .