504 சூளைகளும் தளவாய்புரம், முகவூர், சம்சிகாபுரம், சத்திர பட்டி என்னும் ஊர்களில் பெருந்தொகையினராக நெசவாளரின் தறிகள் உள்ளன. தளவாய்புரத்தில் கூட்டுறவு முறையில் மருத்துவ மனை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பத்து ரூபாய் செலுத்துபவர்களுக்கு, செலவில்லாமல் நடைமுறை வைத்தியம் செய்யப்படுகிறது. மருந்துகளை அவர்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளவேண்டும். உறுப்பினர் அல்லாதவர்கள் பணம் செலுத்தி மருத்துவ உதவி பெறலாம். சேற்றூர் (சேத்தூர்) என்று தலபுராணத்தில் சேரையூர் குறிக்கப்படுகிறது. இராஜபாளையத்திலிருந்து 10கி.மீ.தொலைவு. ஒன்றியத்தில் இதுவே பெரிய ஊர். மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப் பதால், குற்றாலத்தில் பருவகாலத்தில் பெய்யும் சாரலை இங்கும் ஓரளவு அனுபவிக்கலாம். மேய்ச்சல் வசதியிருப் பதால் கால்நடைகள் நன்கு பேணப்படுகின்றன. மலையோரமாக அமைந்த சிறு பகுதியின் குறுநில மன்னர்களான ஜமீன்தார்கள் அப்பகுதியின் வளத்தால் செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். பாண்டி நாட்டு மறவர் சிலர் கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் குடியேறினர். அவருள் ஒருவர் சோழ அரசனின் கருவூலக் காவலராக இருந்தார். அவர் வழி யினரான சின்னைய தேவர் 16-ஆம் நூற்றாண்டளவில் மதுரை அரசரின் ஆதரவு பெற்று, சேற்றூர்ப் பாளையக் காரர் ஆனார்.கிழக்கிந்தியக் கம்பெனியார் இவர்களுக்கு ஜமீன்தார் என்று பட்டம் வழங்கினர். 19-ஆம் நூற்றாண்டில் இவர்கள் செல்வாக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வட்டம் முழுவதும் பரவியிருந்தது.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/506
Appearance