. 306 தேவர்கள் அனைவரும் குடியேறிச் சிறப்பித்ததால் தேவதானம் என்ற பெயர் ஏற்பட்டதாக இவ்வூரார் கருதுகின்றனர். மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தை யடுத்திருப்பதால், நிலவளமும் நீர்வளமும் சிறந்து விளங்குகின்றன. அரசினர் விதைப் பண்ணை ஒன்றை நிறுவியுள்ளனர். சேற்றூர்க் குறுநில மன்னர்கட்கு உரிய நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் இவ்வூர்க்கு மேற்கே 3கி.மீ. தொலைவில், தனியிடத்தில் அமைந்திருக்கிறது. இக் கோவில் சேற்றூர்க் குறுநில மன்னராக இருந்த சின்மயத் தேவரால் கட்டப்பெற்றது. அவர் வழியினர் இக் கோவிலுக்கு வளமலி நிலங்களும் அணிகலன்களும் வழங்கியுள்ளனர்; இன்றளவும் குறுநில மன்னரே இக் கோயிலின் அறங்காவலராக இருந்து வருகிறார். பாண் இறைவன் பெயர் நச்சாடை தவிர்த்தருளிய நாதர் என்றும் நச்சாடீசுவரர் என்றும் கல்வெட்டுக்களில் குறிப் பிடப்படுகிறது. மக்கள் வழக்கில் நிலவி வரும் பெயர் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி என்பதாகும். டியனைக் கொல்லும் பொருட்டுச் சோழன் அனுப்பிய நச்சு கலந்த ஆடையின் வாயிலாக நேர இருந்த தீங்கைத் தவிர்த்தருளியதால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். றைவியின் பெயர் தவம் பெற்ற நாயகி என்பதாகும். கோவிலின் முதற் சுற்றில் மூலவர் கோவிலும் நாயக்கர் காலத்து மண்டபமும் இரண்டாம் சுற்றில் திருமலைக் கொழுந்தீசர் கோவிலும் உள்ளன. கோவி லருகே அரண்மனை மண்டபம், தேவர்கள் மண்டபம் முதலிய பல மாளிகைகளும் கோவிலுக்கு எதிரில் தெப்பக் குளமும், சற்று தொலைவில் (மேற்குத் தொடர்ச்சிமலை யில் தோன்றும்) பச்சையாறு, கோரையாறு என்ற பெயர்களை உடைய சிற்றாறுகளும் உள்ளன. மாசி மகம்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/508
Appearance