507 கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் 10 நாள் விழா. ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நிகழும்; அன்று சேற்றூர்க் குறுநில மன்னர் தண்டியல் சேவை சாற்று வது மரபு. தளவாய்புரம்: தளவாய் அரியநாத முதலியார். பெயரால் 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டிநாட்டில் ஏற்பட்ட ஊர்களுள் இதுவும் ஒன்று. சேற்றூர்ப் பாளை யப்பட்டு இவரால் உண்டாக்கப்பட்டதால், இந்தப்பகுதி யில் இவர் பெயர் தாங்கும் ஊர் இருப்பது இயல்பே. . இவ்வூர் சேற்றூரிலிருந்து தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நெசவுத் தொழில் இங்கே சிறந்து விளங்குகிறது. ஐயனார் கோயில்: இராஜபாளையத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் மலைப்பகுதியில் இருக்கிறது; இங்குச் செல்ல போடப்பட்டிருந்தும் பஸ் போக்கு நல்ல சாலை வரத்துக் கிடையாது. இங்கு நீரகத்து ஐயனார் கோயிலும் இரண்டு ஆள் உயரத்திலிருந்து விழும் அருவியும் உள்ளன. அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகிறது. பருவ காலத் தில் அதன் அளவு கூடுதலாக இருக்கும். சுற்றுலாச் கட்டப் செல்லுபவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் படவேண்டும். இராஜபாளையம் நகருக்கு இங்கிருந்து குழாய்கள் வழியாகக் குடிதண்ணீர் செலுத்தப்படு கிறது. ஜமீன் கொல்லங் கொண்டான்: இராஜபாளையத்துக்கும் தளவாய்புரத்துக்கும் இடையே இருக்கிறது. ஒரு பாளை யப்பட்டு இருந்தது. இப்பாளையக்காரர் ஆங்கிலேய ருக்கு எதிராகப் பூலித்தேவருக்குத் துணையாக இருந் தார்.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/509
Appearance